உள்ளூர் செய்திகள்

தென்பெண்ணை ஆற்றில் அடித்து செல்லப்பட்ட வாலிபரை தேடும் பணி தீவிரம்

Published On 2023-09-09 15:24 IST   |   Update On 2023-09-09 15:24:00 IST
  • மொபட்டில் தரைப்பாலத்தை கடக்க முயன்ற இருவரும் ஆற்றுக் குள் தவறி விழுந்தனர்.
  • சந்திரன் ஆற்றில் அடித்து செல்லப்பட்டார்.

ராயக்கோட்டை,  

கிருஷ்ணகிரி மாவட்டம், உத்தனப்பள்ளி அருகே உள்ள கூலியம் கிராமத்தை சேர்ந்தவர்கள் சந்துரு (வயது 25), மற்றும் ரஞ்சித் குமார் (25). இவர்கள் இருவரும் தனியார் கம்பெ னியில் வேலை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் நேற்றிரவு 7.30 மணிக்கு மொபட்டில் ஊருக்கு சென்றனர். பண்டப்பள்ளி அருகே தென்பெண்ணை ஆற்றின் நீர்வரத்து அதிகமாக இருந்ததால் ஆற்றின் குறுக்கே உள்ள தரைப்பா லத்தின் மீது தண்ணீர் சென்றது. இதனால் மொபட்டில் தரைப்பாலத்தை கடக்க முயன்ற இருவரும் ஆற்றுக் குள் தவறி விழுந்தனர்.

இதில் ரஞ்சித்குமார் காயத்து டன் உயிர் தப்பினார். சந்திரன் ஆற்றில் அடித்து செல்லப்பட்டார். தகவலறிந்த ராயக் கோட்டை தீயணைப்புத்துறையினர் மற்றும் உத்தனப் பள்ளி போலீசார் சந்திரனை தேடி வருகின்றனர்.

Similar News