உள்ளூர் செய்திகள்

தூத்துக்குடியில் அனுமதியின்றி செயல்பட்டு வந்த சுண்ணாம்பு தயாரிப்பு நிறுவனத்திற்கு சீல் வைப்பு - மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை

Published On 2023-08-07 08:59 GMT   |   Update On 2023-08-07 08:59 GMT
  • சுண்ணாம்பு தயாரிக்கும் போது அதிக அளவு புகை வெளியாகி மாசுகள் ஏற்படுவதால் சுவாச பாதிப்பு ஏற்பட்டு மிகுந்த அவதி அடைந்து வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்து வந்தனர்.
  • அப்பகுதியில் அனுமதியின்றி மாசு ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு வந்த சுண்ணாம்பு தயாரிப்பு நிறுவனத்திற்கு மாநகராட்சி அதிகாரிகள் அதனை அகற்ற நோட்டீஸ் வழங்கி நேரில் சென்றும் வலியுறுத்தினர்.

தூத்துக்குடி:

தூத்துக்குடி மாநகராட்சி 50-வது வார்டு கிருபைநகர் பூங்கா பின்புறம் அனுமதி இன்றி செயல்பட்டு வந்த சுண்ணாம்பு தயாரிப்பு நிறுவனத்தில் சுண்ணாம்பு தயாரிக்கும் போது அதிக அளவு புகை வெளியாகி சுற்றுச்சூழல் சீர்கேடு, மாசுகள் ஏற்படுவதால் சுவாச பாதிப்பு ஏற்பட்டு மிகுந்த அவதி அடைந்து வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்து வந்தனர்.

இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, கமிஷனர் தினேஷ்குமார் ஆகியவருக்கு அப்பகுதி மக்கள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வாலர்கள் கோரிக்கை விடுத்தனர். இதனை தொடர்ந்து அப்பகுதியில் அனுமதியின்றி மாசு ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு வந்த சுண்னாம்பு காளவாசலுக்கு மாநகராட்சி அதிகாரிகள் அதனை அகற்ற நோட்டீஸ் வழங்கி நேரில் சென்றும் வலியுறுத்தினர்.

எனினும் அதனை அகற்றவில்லை என கூறப்படுகிறது. இதனால் அங்கு சென்ற மாநகராட்சி அதிகாரிகள், சுண்ணாம்பு காளவாசலை பூட்டி சீல் வைத்தனா.

Tags:    

Similar News