உள்ளூர் செய்திகள்

பல்வேறு அறிவியல் ஆய்வு செயல்பாடுகளை செய்து காண்பித்த மாணவர்கள்.

தஞ்சை பள்ளி மாணவ-மாணவிகளின் அறிவியல் ஆய்வு செயல்பாடுகள்

Published On 2022-10-27 15:22 IST   |   Update On 2022-10-27 15:22:00 IST
  • மாணவர்கள் தங்களது பள்ளியை குப்பையில்லா பள்ளியாக மாற்ற முயன்று வருகின்றனர்.
  • மழை நீரை வீணாக்காமல் அதனை சேகரித்து மருத்துவ தோட்டத்திற்கு பயன்படுத்தி வருகின்றனர்.

தஞ்சாவூர்:

தஞ்சை மகரிஷி வித்யா மந்திர் மாணவர்களின் அறிவியல் ஆய்வு செயல்பா டுகள் நடைபெற்றன. மகான் மகரிஷி மகேஷ் யோகி ஆசியுடன் உணர்வு நிலை சார்ந்த கல்வி கற்கும் மாணவர்கள் அதன் வெளிப்பாடாக ஆக்கபூர்வமான அறிவியல் செயல்பாடுகளுள் ஒன்றாக

தங்களது பள்ளியில் சேரும் குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து மக்கும் குப்பைகளை நன்றாக மக்கச் செய்து பள்ளியில் பராமரிக்கப்படும் மருத்துவத் தோட்டத்திற்கு அவ்வுரத்தினை பயன்படுத்துகின்றனர்.

மக்காத குப்பைகளான நெகிழி போன்ற பொருட்களை மறுசுழற்சி செய்து அதனை பள்ளிக்கு பயன்படும் அழகுப் பொருட்களாக மீள் உருவாக்கம் செய்கின்றனர்.

நெகிழியை எரிப்பதால் ஓசோன் படலம் பாதிப்படையும் என்பதனால் அதனை எரிக்கும் போது ஏற்படும் புகையையும் சேகரித்து அதனையும் எரிபொருளாக பயன்படுத்த திட்டமிட்டுள்ளனர்.

இந்த அறிவியல் ஆய்வுத் திட்டத்தின் மூலம் மாணவர்கள் தங்களது பள்ளியை குப்பையில்லாத பள்ளியாக மாற்ற முயன்று வருகின்றனர்.

நீரின்றி அமையாது உலகு என்பதனை உணர்ந்த என் பள்ளி மாணவர்கள் வானம் உமிழும் அமிர்தமாம் மழை நீரை வீணாக்காமல் அதனை சேகரித்து மருத்துவத் தோட்டத்திற்கு பயன்படுத்தி வருகின்றனர்.

மழை நீரை பள்ளியின் கழிவறைக்கும் பயன்படுத்தவும் திட்டமிட்டு ள்ளனர்.நீர் மாசு, நிலமாசு, காற்று மாசு என அனைத்து மாசுகளையும் நீக்கும் அறிவியல் ஆய்வுப் பணியில் ஈடுபட்டு வரும் மாணவர்களையும் அதற்கு உறுதுணையாக உள்ள அறிவியல் ஆசிரியர்களையும் பள்ளி முதல்வர் அனிதாராம் ஊக்க மூட்டியும் உற்சாகமூட்டியும் பாராட்டினார்.

Tags:    

Similar News