உள்ளூர் செய்திகள்

பூலாங்குளத்தில் 40 ஆண்டுகளுக்கு பின் பள்ளி மாணவர்கள் சந்திப்பு

Published On 2023-05-14 08:34 GMT   |   Update On 2023-05-14 08:34 GMT
  • நிகழ்ச்சியில் குழந்தைகள் மற்றும் பேர குழந்தைகளுடன் பழைய மாணவர்கள் உற்சாகமாக கலந்து கொண்டனர்.
  • கல்வியை போதித்த ஆசிரியர்களுக்கு சந்தன மாலைகளை சூட்டினர்.

தென்காசி:

பாவூர்சத்திரம் அருகே உள்ள பூலாங்குளத்தில் மாதாபட்டணம் எஸ்.எஸ்.வி. மேல்நிலைப்பள்ளியின் 1981-ம் ஆண்டு முதல் 1983-ம் ஆண்டு வரை பயின்ற பள்ளி மாணவர்கள் சுமார் 75 பேர் 40 ஆண்டுகளுக்கு பின்பு சந்திக்கும் நிகழ்ச்சியை நடத்தினர்.

பூலாங்குளத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் நடந்த நிகழ்வில் 75 பழைய மாணவர்களும் தங்களின் குழந்தைகள் மற்றும் பேர குழந்தைகளுடன் உற்சாகமாக கலந்து கொண்டு கலந்துரையாடிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தும் வண்ணம் அமைந்தது.

இதில் தங்களுக்கு பள்ளியில் கல்வியை போதித்த குருவாக செயல்பட்ட ஆசிரியர்களுக்கு சந்தன மாலைகளை சூட்டி கவுரவித்து அவர்களுடன் சேர்ந்து குழுபுகைப் படத்தை ஆர்வமுடன் எடுத்துக் கொண்டனர்.

நிகழ்ச்சியின் முடிவில் அனைவரும் ஒன்றாக அமர்ந்து உணவு உண்ணும் பொழுது தங்களின் பள்ளி படிப்பு காலத்தில் நண்பர்கள் உணவருந்தியதை நினைவு கூறும் வகையில் உணவினை ஒருவருக்கொருவர் பரிமாறிய நிகழ்ச்சி அங்கிருந்தவர்களை ஆச்சரியப் படுத்தியது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை மாதாபட்டணம் எஸ்.எஸ்.வி. மேல்நிலைப்பள்ளியின் பழைய மாணவர்கள் குழு செய்திருந்தனர்.

Tags:    

Similar News