உள்ளூர் செய்திகள்

 பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் வழக்கறிஞர் மோகன் கல்வி ஊக்கத் தொகை வழங்கினார்.

மாணவர்களுக்கு கல்வி ஊக்க தொகை

Published On 2022-06-25 10:13 GMT   |   Update On 2022-06-25 10:13 GMT
  • பெற்றோர் ஆசிரியர் கழகத் துணைத் தலைவர் ரஞ்சித், செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் மூர்த்தி ,மாரியப்பன், கருணாநிதி, ராஜ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
  • 12-ம் வகுப்பில் 500 மதிப்பெண்ணுக்கு மேல் எடுக்கும் அனைத்து மாணவ-மாணவிகளுக்கும் தலா ரூ.1 லட்சம் வழங்கப்படும்.

கபிஸ்தலம்:

திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் தாலுகா, ஆலங்குடி ஊராட்சியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் கல்வி ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்ச்சி பள்ளி தலைமை ஆசிரியர் ஆனந்தன் தலைமையில் நடைபெற்றது.

பெற்றோர் ஆசிரியர் கழகத் துணைத் தலைவர் ரஞ்சித், செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் மூர்த்தி ,மாரியப்பன், கருணாநிதி, ராஜ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு விருந்தினராக பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவரும், ஆலங்குடி ஊராட்சி மன்றத் தலைவருமான வழக்கறிஞர் மோகன் கலந்து கொண்டு பள்ளியில் படித்த 10 மற்றும்

12-ம் வகுப்பில் முதல் 3 இடம் பிடித்த மாணவ-மாணவிகளுக்கு கல்வி ஊக்கத் தொகைகளை வழங்கி பேசியதாவது:-

வருகின்ற 2022-ம் ஆண்டு நம் பள்ளியில் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் 400 மதிப்பெண்களுக்கு மேல் எடுக்கும் அனைத்து மாணவ- மாணவிகளுக்கும் ஊக்கத் தொகையாக தலா ரூ.50,000 வழங்கப்படும்.

12-ம் வகுப்பில் 500 மதிப்பெண்ணுக்கு மேல் எடுக்கும் அனைத்து மாணவ-மாணவிகளுக்கும் தலா ரூ.1 லட்சம் வழங்கப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற துணை தலைவர், உறுப்பினர்கள், பள்ளி ஆசிரிய, ஆசிரியைகள் மாணவ- மாணவிகள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News