உள்ளூர் செய்திகள்

கல்வி உதவித்தொகை தருவதாக வங்கி கணக்கில் மோசடி

Published On 2022-11-10 15:24 IST   |   Update On 2022-11-10 15:24:00 IST
  • மகளுக்கு அரசு மூலம் வழங்கப்படும் கல்வி உதவித்தொகை பணம் வந்துள்ளதாக கூறுகின்றனர்.
  • இதன் மூலம் பெற்றோரின் வங்கி கணக்கிலிருந்து பணத்தை முறைகேடான பரிவர்த்தனை மூலம் எடுத்து விடுகின்றனர்.

நாமக்கல்:

நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாய்சரண் தேஜஸ்வி உத்தரவின் பேரில் மாவட்ட சைபர் கிரைம் போலீசார் மாவட்ட முதன்மை கல்வி அலுவலருக்கு அனுப்பி உள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது:-

கல்வி உதவித்ெதாகை

நாமக்கல் மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளை சேர்ந்த அரசு மற்றும் தனியார் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர் தொலைபேசி எண்ணை மர்ம நபர்கள் தொடர்பு கொண்டு, தங்கள் மகன் அல்லது மகள் படிக்கும் அரசு அல்லது தனியார் பள்ளி, கல்லூரிகளில் இருந்து பேசுவதாகவும், தங்கள் மகன் அல்லது மகளுக்கு அரசு மூலம் வழங்கப்படும் கல்வி உதவித்தொகை பணம் வந்துள்ளதாக கூறுகின்றனர்.

மேலும் அந்த பணத்தை அவர்களது வங்கி கணக்கில் வரவு வைப்பதற்காக பெற்றோரின் வங்கி கணக்கு விவரங்களை பெற்றுக் கொண்டு, கூகுள்பே க்யூ ஆர் கோடுகள் மற்றும் பின் நம்பர்களை ஸ்கேன் செய்து அனுப்புமாறு கேட்கிறார்கள்.

முறைகேடு

இதன் மூலம் பெற்றோரின் வங்கி கணக்கிலிருந்து பணத்தை முறைகேடான பரிவர்த்தனை மூலம் எடுத்து விடுகின்றனர்.

இது சம்பந்தமாக பல்வேறு புகார்கள் சைபர் கிரைம் பிரிவில் பெறப்பட்டு விசாரணையில் உள்ளது. இது குறித்து நடந்த விரிவான விசாரணையில் வெளி மாநிலங்களைச் சேர்ந்த நபர்கள் தமிழில் பேசி மோசடியில் ஈடுபட்டு வருவது தெரிய வந்தது.

பெற்றோர்கள் உஷார்

பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளின் தனிப்பட்ட தகவல்கள் மோசடிக்காரர்களிடம் இருப்பதாக தெரிகிறது.

ஆகவே மாணவ, மாணவி–களின் தனிப்பட்ட தகவல்களை முன் எச்ச–ரிக்கையுடன் பாதுகாத்து வைக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது. மோசடிக்காரர்களால் கல்வி உதவித் தொகை பணம் ரூ.14,500 என குறிப்பிட்டு சொல்வதாக கூறப்படுகிறது.

பெற்றோர்களுக்கு கல்வி உதவித்தொகை பற்றிய விழிப்புணர்வும் இல்லாமல் உள்ளது. எனவே பள்ளிக் கல்வித்துறை மூலம் மாணவ, மாணவிகளின் பெற்றோரிடம் இதுபோன்ற மோசடி குறித்து விழிப்பு–ணர்வு ஏற்படுத்த வேண்டும். ஸ்காலர்ஷிப் சம்பந்தமான தகவல்களை சம்பந்தப்பட்ட பள்ளி, கல்லூரிகளின் மூலம் தெரிந்து கொள்ள அறிவுறுத்தியும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News