ஆர்வமுடன் புத்தகத்தை பார்வையிடும் பள்ளி மாணவ, மாணவிகளை படத்தில் காணலாம்.
புத்தக திருவிழாவில் புத்தகம் வாங்கும் பொதுமக்களுக்கு மரக்கன்றுகள்
- 30 ஆயிரம் தலைப்புகளில் சுமார் 3.50 லட்சத்திற்கும் மேற்பட்ட புத்தகங்கள் காட்சிப் படுத்தப்பட்டுள்ளன.
- மாணவிகள் மற்றும் பொதுமக்கள் பார்வை யிட்டு புத்தகங்களை வாங்கி செல்கின்றனர்.
தருமபுரி,
தருமபுரி புத்தக திருவிழாவில், புத்தகம் வாங்கும் பொது மக்களுக்கு சுற்றுச்சுழலை பாதுகாக்க மரக்கன்றுகள் விநியோகம் செய்யப்படு கிறது. இதுவரை 1500 மரக் கன்றுகள் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. இந்த புத்தக திருவிழா நாளை வரை நடக்கிறது.
தருமபுரி மாவட்ட நிர்வாகம், தகடூர் புத்தகப் பேரவை மற்றும் பாரதி புத்தகாலயம் மூலம் புத்தகத் திருவிழா வானது வள்ளலார் திடலில் கடந்த 8-ம்தேதி முதல் நடந்து வருகிறது. இன்று புத்தக கண் காட்சி நிறைவு பெறுவதாக இருந்தது. ஆனால் நாளை (18ம் தேதி) வரை புத்தக கண்காட்சி நடக்கிறது.
இப்புத்தக திருவிழாவில் 100-க்கும் மேற்பட்ட அரங்குகளில் 30 ஆயிரம் தலைப்புகளில் சுமார் 3.50 லட்சத்திற்கும் மேற்பட்ட புத்தகங்கள் காட்சிப் படுத்தப்பட்டுள்ளன. தினந்தோறும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் பார்வை யிட்டு புத்தகங்களை வாங்கி செல்கின்றனர்.
இந்த புத்தக திருவிழாவில் சிறப்பான வாழ்க்கைக்கும், சிறந்த வளர்ச்சிக்கும் கல்வி மிக மிக அவசியம் என்பதை உணர்ந்து, கட் டாயம் புத்தக வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தப் பட்டு வருகிறது. இவ்வாறு புத்தகம் வாங்க வரும் பொதுமக்களுக்கும், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவி களுக்கு சுற்றுச்சுழலை பாதுகாக்க மரக்கன்று வழங்கப்படுகிறது.
நாவல், அத்தி, புங்கன், கொய்யா, பாதம் உள்ளிட்ட ரக மரக்கன்றுகள் வழங்கப் படுகிறது. இதுவரை 1500 மரக்கன்றுகள் வழங்கப் பட்டுள்ளது என்று தகடூர் புத்தகப் பேரவை தலை வர் டாக்டர் செந்தில், செயலாளர் சிசுபாலன் மற்றும் நிர்வாகிகள் தெரிவித்தனர்.