உள்ளூர் செய்திகள்

மரக்கன்றுகள் நடப்பட்டது.

மரக்கன்று நடும் விழா

Published On 2022-10-09 09:29 GMT   |   Update On 2022-10-09 09:29 GMT
  • 500-க்கும் மேற்பட்ட பழமரக்கன்றுகள் நடப்பட்டு கூண்டு வைத்து பராமரிக்கும் பணி நடைபெற்றது.
  • செம்பனார்கோயில், குத்தாலம் உள்ளிட்ட பகுதிகளில் 2600 மரக்கன்றுகள் நட தீர்மானம்.

சீர்காழி:

சீர்காழி அடுத்த கன்னியாக்குடி கிராமத்தில் அரசு மனநல காப்பகம் அமையவுள்ள வளாகம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் ஒரு வீட்டிற்கு மூன்று மரக்கன்றுகள் என்ற அமைப்பின் சார்பில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. சீர்காழி ஒன்றிய ஆணையர் இளங்கோவன் தலைமை வகித்தார்.

வட்டார வளர்ச்சி அலுவலர் சரவணன், ஒன்றிய பொறியாளர் கலைசெல்வன், ஒரு வீட்டிற்கு மூன்று மரக்கன்றுகள் அமைப்பினை சேர்ந்த யாமினிஅழகுமலர் முன்னிலை வகித்தனர். சீர்காழி கோட்டாட்சியர் உ.அர்ச்சனா பங்கேற்று மரக்கன்றுகளை நட்டு துவக்கிவைத்தார்.

தொடர்ந்து 500க்கும் மேற்பட்ட பல்வேறு பலன் தரும் பழமரக்கன்றுகள் ஒரேநாளில் நடப்பட்டு கூண்டு வைத்து பராமரிக்கும் பணி நடைபெற்றது. இந்த அமைப்பு சார்பில் மயிலாடுதுறை, கொள்ளிடம், செம்பனார்கோயில், குத்தாலம் உள்ளிட்ட பகுதிகளில் 2600மரக்கன்றுகள் நட தீர்மானிக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.

Tags:    

Similar News