உள்ளூர் செய்திகள்

விழாவில் கலந்து கொண்ட பக்தர்கள்.

சஞ்சீவராய ஆஞ்சநேயர், பெருமாள் கோவில் கும்பாபிசேகம்

Published On 2022-09-09 10:20 GMT   |   Update On 2022-09-09 10:20 GMT
  • சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள கட்ட பெரியாம்பட்டி கிராமம் நமச்சிவாயனூர் பகுதியில் நூற்றாண்டு பழமை வாய்ந்த சஞ்சீவிராய ஆஞ்சநேயர் கோவில் உள்ளது.
  • சஞ்சீவராய ஆஞ்சநேய சுவாமி கருட கம்பம் அமைக்கப்பட்டு ஆகம விதிப்படி கும்பாபிஷேகம் நடைபெற்றது.

ஓமலூர்:

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள கட்ட பெரியாம்பட்டி கிராமம் நமச்சிவாயனூர் பகுதியில் நூற்றாண்டு பழமை வாய்ந்த சஞ்சீவிராய ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இக்கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதற்காக யாக சாலை அமைக்கப்பட்டு சஞ்சீவராய ஆஞ்சநேய சுவாமி கருட கம்பம் அமைக்கப்பட்டு ஆகம விதிப்படி கும்பாபிஷேகம் நடைபெற்றது.

இதை தொடர்ந்து கும்பாபிஷேகத்திற்கு முன்பாக கடந்த 5- தேதி தீபஸ்தம்ப பாலாலயம், அங்குரார்ப்பணம், ரக்க்ஷாபந்தனம், முகூர்த்தக்கால் நடுதல் நடைபெற்றது. இதை தொடர்ந்து இன்று காலை வாஸ்து பூஜை, முதற்கால யாக வேள்வி, பூர்ணாகுதியும் தொடர்ந்து 2-ம் கால யாக வேள்வி, திருமஞ்சனம், கருடகம்ப பிரதிஷ்டை கும்பாபிஷேகம் நடைபெற்றது.

விழாவில் அந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து வந்த பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை நச்சுவாயனூர் கட்ட பெரியாம்பட்டியை சேர்ந்த பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.

Tags:    

Similar News