உள்ளூர் செய்திகள்

மணல் ஏற்றிச்செல்லும் லாரி.

வாகன ஓட்டிகளின் கண்களை பதம்பார்க்கும் மணல் லாரிகள்- தடுக்க நடவடிக்கை எடுக்க கோரிக்கை

Published On 2022-07-20 08:36 GMT   |   Update On 2022-07-20 08:36 GMT
  • மணல் ஏற்றிச் செல்லும் பொழுது அதனை தார்ப்பாய்கள் கொண்டு மூடி செல்லவேண்டும் என்பது விதி.
  • இருசக்கர வாகனத்தில் செல்லும் வாகன ஓட்டிகளின் கண்களை லாரியிலிருந்து காற்றில் பறக்கும் மணல் துகள்கள் பதம் பார்த்து வருவதாக வாகன ஓட்டிகள் தெரிவிக்கின்றனர்.

தென்காசி:

தென்காசி மாவட்டம் திரவிய நகர், பழைய குற்றாலம், மத்தளம்பாறை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தென்காசி மற்றும் கேரளாவிற்கு கட்டுமான பணிகளுக்காக லாரிகளில் மணல் ஏற்றிச் செல்லப்படுகின்றன. மணல் ஏற்றிச் செல்லும் பொழுது அதனை தார்ப்பாய்கள் கொண்டு மூடி செல்லவேண்டும் என்பது விதி. ஆனால் திரவிய நகரில் இருந்து தென்காசி சாலை வழியாக செல்லும் லாரிகளில் மணலை தார்ப்பாய்களால் மூடாமல் செல்வதால் பின்னால் இருசக்கர வாகனத்தில் செல்லும் வாகன ஓட்டிகளின் கண்களை லாரியிலிருந்து காற்றில் பறக்கும் மணல் துகள்கள் பதம் பார்த்து வருகின்றன.

இதில் பல வாகன ஓட்டிகள் சாலையில் இருந்து கீழே தவறி விழுந்து விபத்து ஏற்படுகிறது.

எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மணல் ஏற்றிச் செல்லும் லாரிகளில் பாதுகாப்புடன் மணல் துகள்கள் காற்றில் பறக்காத வண்ணம் தார்ப்பாய்களால் மூடி கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என திரவிய நகர், மத்தளம்பாறை பகுதி பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News