உள்ளூர் செய்திகள்

சந்திராயன்-3 திட்ட இயக்குனர் வீரமுத்துவேலுடன் கோயில் சாமி தரிசனம் செய்தார்.

சுவேதாரண்யேஸ்வரர் சாமி கோவிலில் சந்திரயான்-3 திட்ட இயக்குனர் குடும்பத்துடன் சாமி தரிசனம்

Published On 2023-09-10 11:16 GMT   |   Update On 2023-09-10 11:16 GMT
  • புதன்பகவான் தனி சன்னதியில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.
  • சந்திரயான்-3 திட்ட இயக்குனருமான வீரமுத்துவேல் தனது மனைவியுடன் கோயிலுக்கு வருகைதந்தார்.

சீர்காழி:

சீர்காழி அடுத்த திருவெண்காட்டில் பிரம்மவி த்யாம்பிகை உடனாகிய சுவேதாரண்யே ஸ்வரர் சாமி திருக்கோவில் அமைந்துள்ளது.

இக்கோயிலில் சிவபெருமான் அகோரமூர்த்தியாக அருள்பாலித்து வருகிறார்.

நவக்கிரகங்களில் ஞானாகரன் என்றழைக்கப்படும் புதன்பகவான் தனி சன்னதியில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

மேலும் காசிக்கு இணையான ஆறுதலங்களில் முதன்மையான தலமாக இக்கோவில் உள்ளது.

இக்கோ யிலில் அக்னி, சந்திரன்,சூரியன் ஆகிய மூன்று தீர்த்தகுளங்கள் அமைந்துள்ளது.

பிரசித்திப்பெற்ற இக்கோயிலுக்கு இந்திய வின்வெளி ஆய்வுமைய திட்ட இயக்குனர்களில் ஒருவரும்,சந்திரயான்-3 திட்ட இயக்குனருமான வீரமுத்து வேல் தனது மனைவியுடன் திருவெண்காடு கோயிலுக்கு வருகைதந்தார்.

அவருக்கு கோயில் சிவாச்சாரியார்கள் வரவேற்பு அளித்தனர்.

தொடர்ந்து வீரமுத்துவேல் சுவாமி, அம்பாள், அகோரமூர்த்தி சுவாமி சன்னதிகளில் தரிசனம் செய்து, புதன்சன்னதிக்கு சென்று அர்ச்சனை செய்து வழிபாடு செய்தார். அவருடன் கோயில் சிவாச்சாரியார்கள், பக்தர்கள் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.

Tags:    

Similar News