தஞ்சை மாநகர தி.மு.க. அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் நல்லிணக்க திருவிழா நடந்தது.
தஞ்சை மாநகர தி.மு.க அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் நல்லிணக்க திருவிழா
- தஞ்சை அருளானந்த நகரில் உள்ள மாநகர தி.மு.க. அலுவலகத்தில் இன்று சமத்துவ பொங்கல் நல்லிணக்க திருவிழா நடைபெற்றது.
- பொங்கல் பானையில் பொங்கல் வைத்து கட்சி நிர்வாகிகளுக்கு இலவசமாக வேட்டிகளை மேயர் சண். ராமநாதன் வழங்கினார்.
தஞ்சாவூர்:
தஞ்சை அருளானந்த நகரில் உள்ள மாநகர தி.மு.க. அலுவலகத்தில் இன்று சமத்துவ பொங்கல் நல்லிணக்க திருவிழா நடைபெற்றது. மாநகரச் செயலாளரும் மாநகராட்சி மேயருமான சண் ராமநாதன் அனைவரையும் வரவேற்றார்.
இதில் பாரம்பரிய கிராமிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
பொங்கல் பானையில் பொங்கல் வைக்கப்பட்டது. கட்சி நிர்வாகிகள் அனைவருக்கும் இலவசமாக வேட்டிகளை மேயர் சண். ராமநாதன் வழங்கினார்.
தொடர்ந்து பல்வேறு வகையான விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டது. இந்த விழாவில் மாவட்ட பொருளாளர் எல்.ஜி. அண்ணா, மாநில மகளிர் அணி ஆலோசனை குழு உறுப்பினர் காரல் மார்க்ஸ், மாவட்ட துணை செயலாளர்கள் மணிமாறன், கனகவள்ளி பாலாஜி, பொதுக்குழு உறுப்பினர் புண்ணியமூர்த்தி, பகுதி செயலாளர்கள் மேத்தா, சதாசிவம், கார்த்திகேயன், நீலகண்டன், மண்டல குழு தலைவர்கள் புண்ணியமூர்த்தி, ரம்யா சரவணன், கலையரசன், மாநகர பொருளாளர் காளையார் சரவணன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.