உள்ளூர் செய்திகள்

 பூஜை பொருட்கள் வாங்க அய்யப்ப பக்தர்கள் குவிந்தனர்.

நாளை கார்த்திகை மாதப்பிறப்பு பூஜை பொருட்கள் விற்பனை விறுவிறுப்பு

Published On 2022-11-16 12:54 IST   |   Update On 2022-11-16 12:54:00 IST
  • சபரிமலை அய்யப்பன் கோவிலில் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜைக்காக இன்று மாலை நடை திறக்கப்படுகிறது.
  • வீடுகளில் சுத்தம் செய்து மாலை அணிவதற்கு தேவையான வேஷ்டி, துளசி மாலைகள், பூஜைபொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டினர்.

திண்டுக்கல்:

சபரிமலை அய்யப்பன் கோவிலில் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜைக்காக இன்று மாலை நடை திறக்கப்படுகிறது. இதனைதொடர்ந்து அய்யப்ப பக்தர்கள் நாளை காலை முதல் கோவில்களில் மாலை அணிந்து தங்கள் விரதத்தை தொடங்க உள்ளனர்.

இதனையடுத்து வீடுகளில் சுத்தம் செய்து மாலை அணிவதற்கு தேவையான ேவஷ்டி, துளசி மாலைகள், பூஜைபொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டினர். இதனால் திண்டுக்கல் கடைவீதிகளில் அய்யப்ப பக்தர்களின் கூட்டம் அதிகரித்தது.

மாலை அணிந்து விரதம் தொடங்குவதற்கான பூஜை பொருட்களை அவர்கள் வாங்கிச்சென்றனர். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா ஊரடங்கால் சபரிமலை அய்யப்பன்கோவிலுக்கு செல்ல பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது. இந்த முறை முன்பதிவு செய்து வரும் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படும் என்று தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

முன்பதிவு செய்ய முடியாத பக்தர்கள் நிலக்கல் உள்பட 6 இடங்களில் செயல்படும் தற்காலிக மையங்களில் முன்பதிவு செய்து சாமி தரிசனம் செய்யவும் ஏற்பாடு செய்துள்ளது. இதுதவிர 2 ஆண்டுகளுக்குபிறகு மீண்டும் பெரியபாதையும் பக்தர்களுக்காக திறக்கப்பட்டுள்ளது. இதனால் பக்தர்களின் வருகை அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

நாளை காலை அய்யப்ப பக்தர்கள் மாலை அணிவதற்காக பல்வேறு கோவில்களிலும் சிறப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

Tags:    

Similar News