உள்ளூர் செய்திகள்
சேலம் மாநகராட்சி பகுதியில் நாளை குடிநீர் விநியோகம் நிறுத்தம்
பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு மாநகராட்சி ஆணையாளர் பாலசந்தர் கேட்டுக் கொண்டுள்ளார்.
சேலம்
சேலம் மாநகராட்சியின் தனிக்குடிநீர் திட்டம் செயல்படும் மேட்டூர் தொட்டில்பட்டி பகுதியில் தமிழ்நாடு மின் வாரியத்தால் மின் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதனால் நாளை மேட்டூர் தொட்டில்பட்டியில் உள்ள மாநகராட்சி தனிக்குடிநீர் திட்டம் செயல்படாது. அதன்படி மாநகராட்சி பகுதிகளில் நாளை ஒரு நாள் மட்டும் குடிநீர் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. எனவே பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு மாநகராட்சி ஆணையாளர் பாலசந்தர் கேட்டுக் கொண்டுள்ளார்.