உள்ளூர் செய்திகள்
வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளை
- வீட்டுக்கு திரும்பியபோது கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்
- ரொக்கம், 1/2 மற்றும் 2 பவுன் தங்கச் செயின்கள் கொள்ளை
சேலம்
சேலம் கிச்சிபாளையம் களரம்பட்டி பகுதியை சேர்ந்தவர் சூரியகுமார். இவரது மனைவி கலா (49). இவர் நேற்று முன்தினம் வீட்டை பூட்டிவிட்டு உறவினர் வீட்டிற்கு சென்றார்.
பின்னர் வீட்டுக்கு திரும்பியபோது கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது வீட்டில் வைத்திருந்த ரூ.20 ஆயிரம் ரொக்கம், 1/2 மற்றும் 2 பவுன் தங்கச் செயின்கள் கொள்ளையடிக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது.இதுகுறித்து கலா கிச்சிபாளையம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.