பூச்சிக்கொல்லி ஆலையை அகற்றக்கோரி மனுவை மாலையாக அணிந்து கலெக்டர் அலுவலகம் வந்த கிராம மக்கள்
- 2000 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றோம்.
- தற்போது 6 ஏக்கர் பரப்பளவில் பூச்சிக்கொல்லி ஆலையை நிறுவ நடவடிக்கை
சேலம்
சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே முடக்குபட்டி பகுதியை சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட மக்கள் கழுத்தில் மனுவை மாலையாக அணிந்து கலெக்டர் அலுவலகத்திற்கு நூதன முறையில் புகார் அளிக்க வந்தனர்.
கலெக்டர் அலுவலகத்தில் புகார் அளித்துவிட்டு அவர்கள் கூறியதாவது:-
எங்கள் பகுதியில் 2000 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றோம். மலை குன்றுகள், ஏரிகள், குளங்கள், ஓடைகள் என இயற்கை வளங்கள் நிறைந்து காணப்படும் எங்கள் பகுதியில் தற்போது 6 ஏக்கர் பரப்பளவில் பூச்சிக்கொல்லி ஆலையை நிறுவ நடவடிக்கை எடுக்கப்பட்டது. கட்டுமான பணிகள் முடிவடைந்து தற்போது ஆலையை திறக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
பூச்சிக்கொல்லி ஆலை இப்பகுதியில் வந்தால் விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவது மட்டுமில்லாமல் குடிநீர் மாசு ஏற்பட்டு பல்வேறு விதமான நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளது. இது குறித்து பலமுறை போலீஸ் நிலையத்திலும், ஊராட்சி மன்றத்திலும் புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு அந்தப் பகுதியில் பூச்சிக்கொல்லி ஆலையை திறக்க அனும திக்காமல் ஆணையை ரத்து செய்ய வேண்டும் என தெரிவித்தனர்.