உள்ளூர் செய்திகள்
சேலம் பெரியார் பல்கலைக்கழக பேராசிரியர் சஸ்பெண்டு
இந்த மாதம் ஓய்வு பெற உள்ள நிலையில் பல்கலைக்கழக துணை வேந்தர் ஜெகநாதன் அவரை சஸ்பெண்டு செய்து உத்தர விட்டுள்ளார்.
சேலம்
சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் கல்வியியல் துறை பேராசிரியராக நாச்சிமுத்து என்பவர் பணியாற்றி வந்தார். இவர் இந்த மாதம் ஓய்வு பெற உள்ள நிலையில் பல்கலைக்கழக துணை வேந்தர் ஜெகநாதன் அவரை சஸ்பெண்டு செய்து உத்தர விட்டுள்ளார்.
பேராசிரியர் நாச்சிமுத்து மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் உள்ள நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.