உள்ளூர் செய்திகள்

சேலம் மத்திய சிறையில் கைதிகள் கழிவறையில் செல்போன், சிம்கார்டு பறிமுதல்

Published On 2023-08-24 14:44 IST   |   Update On 2023-08-24 14:44:00 IST
  • கைதிகளின் அறைகளில் ஜெய்லர் மதிவாணன் மற்றும் சிறை காவலர்கள் திடீர் சோதனை
  • சிம் கார்டு மற்றும் செல்போனை கழிவறையில் வைத்தது யார் என்பது குறித்து விசாரணை

சேலம்:

சேலம் மத்திய சிறையில் உள்ள 7-வது பிளாக்கில் கைதிகளின் அறைகளில் ஜெய்லர் மதிவாணன் மற்றும் சிறை காவலர்கள் திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கிருந்த கழிவறையில் ஒரு செல்போன் மற்றும் சிம் கார்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனை பறிமுதல் செய்து சிம் கார்டு மற்றும் செல்போனை கழிவறையில் வைத்தது யார் என்பது குறித்து விசாரணை நடத்தினர். மேலும் இதுகுறித்து ஜெயிலர் மதிவாணன் சேலம் அஸ்தம்பட்டி போலீசில் புகார் செய்தார்.போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News