வட்டார அளவிலான விவசாயிகள் ஆலோசனை கூட்டம்
- வட்டார அளவிலான முன்னோடி விவசாயிகள் உழவன் செயலி மூலம் பதிவு
- தாரமங்கலம் பகுதியில் 10,300 ஏக்கரில் பயிர்கள் விதைக்கப்பட்டு வருகின்றனர்.
தாரமங்கலம்
தாரமங்கலம் வட்டார அளவிலான விவசாயிகள் ஆலோசனை குழு கூட்டம் வேளாண் அலுவலக கட்டிட அரங்கத்தில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு வேளாண்மை உதவி இயக்குனர் கஜேந்திரன் தலைமை தாங்கினார். ஆத்மா திட்ட குழு தலைவர் ஐயப்பன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் கலந்து கொண்ட வட்டார அளவிலான முன்னோடி விவசாயிகள் உழவன் செயலி மூலம் பதிவு செய்து இலவச மரக்கன்றுகள் ஆன வேம்பு.மகாகனி.தேக்கு. செம்மரம் போன்ற கன்றுகளை நடவு செய்ய அறிவுறுத்தப்பட்டனர். மேலும் தற்போது பெய்து வரும் நல்ல மழையை பயன்படுத்தி தாரமங்கலம் பகுதியில் 10,300 ஏக்கரில் துவரை, பச்சைபயிறு, தட்டைப்பயிறு, ராகி உள்ளிட்ட பயிர்கள் விதைக்கப்பட்டு வருகின்றனர்.
பருவநிலை மாற்றத்தின் காரணமாக காலதாமதமாக பெய்த மழையால் விதைப்பு பணிகள் மகசூல் பாதிக்கப்பட்டு விவசாயிகளுக்கு இழப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. இந்த இழப்பீட்டை தவிர்க்கவும் மகசூலை அதிகரிக்கவும் விவசாயிகளுக்கு உரிய ஆலோசனை வழங்கப்பட்டது.மேலும் இக்கூட்டத்தில் தோட்டக்கலை உதவி இயக்குனர் ஷர்மிளாதேவி, வேளாண் உதவி பொறியாளர், பட்டு வளர்ச்சித்துறை ஆய்வாளர், மீன்வளத்துறை ஆய்வாளர் உட்பட பலர் கலந்து கொண்டு பயிற்சி அளித்தனர்.