உள்ளூர் செய்திகள்

குடிசை வீட்டில் தீ விபத்து

Published On 2023-09-22 15:05 IST   |   Update On 2023-09-22 15:05:00 IST
  • நடேசன் விறகு அடுப்பில் சமையல் செய்து விட்டு தீயை அணைக்காமல் கடைக்கு சென்றுவிட்டார்.
  • கடைக்குச் சென்ற நடேசன் திரும்பி வந்து பார்த்தபோது குடிசை வீடு தீப்பற்றி எரிந்தது

மேட்டூர்

மேட்டூர் அருகே புதுக்காடு பகுதியை சேர்ந்த விவசாயி நடேசன் (63) இவரது மனைவி சரோஜா (55) . இவர்கள் இருவரும் அப்பகுதியில் உள்ள ஒரு குடிசை வீட்டில் வசித்து வந்தனர். மனைவி சரோஜா ஊருக்கு சென்ற நிலையில் நடேசன் விறகு அடுப்பில் சமையல் செய்து விட்டு தீயை அணைக்காமல் கடைக்கு சென்றுவிட்டார். அப்போது அடுப்பில் இருந்த தீ பொறி குடிசையில் பட்டு மள, மள குடிசை வீடு தீப்பற்றி எரிய தொடங்கியது.

கடைக்குச் சென்ற நடேசன் திரும்பி வந்து பார்த்தபோது குடிசை வீடு தீப்பற்றி எரிந்ததை கண்டு கூச்சலிட்டார். அருகில் இருந்தவர்கள் உடனடியாக வீட்டில் இருந்த எரிவாயு சிலிண்டரை வெளியே எடுத்து வந்தனர். இதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. தீ விபத்து குறித்து கருமலைக்கூடல் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் ஒரு மணி நேரம் போராடி குடிசை வீட்டில் ஏற்பட்ட தீயை அணைத்தனர். இந்த விபத்தில் குடிசை வீடு முழுவதும் எரிந்து சேதம் அடைந்தது மேலும் வீட்டிலிருந்த துணிகள், மளிகை பொருட்கள் தீயில் எரிந்து சேதமாகியது. இது குறித்து கருமலை கூடல் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News