உள்ளூர் செய்திகள்

தென்னை மரத்துக்கு வைக்கும் பூச்சி மாத்திரை சாப்பிட்ட முதியவர் சாவு

Published On 2023-09-22 15:10 IST   |   Update On 2023-09-22 15:10:00 IST
சுப்பிரமணி மனநிலை பாதிக்கப்பட்டவர்

தாரமங்கலம்

தாரமங்கலம் அருகிலுள்ள துட்டம்பட்டி கிராமம். செங்கோ டனூர் பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணி (60). இவர் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு கீழே தவறி விழுந்து தலையில் அடிபட்டு மனநிலை பாதிக்கப்பட்டவர் போல் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் சம்பவத்தன்று தனது வீட்டில் தென்னை மரத்திற்கு வைத்தி ருந்த பூச்சி மாத்திரையை சாப்பிட்டு மயக்க நிலையில் இருந்துள்ளார். அவரை உடனடியாக மீட்ட அவரது குடும்பத்தினர் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். அங்கு சிகிச்சையில் இருந்த சுப்பிரமணி நேற்று சிகிச்சை பலனின்றி இறந்துள்ளார். இது பற்றி அவரது மகன் சதீஷ் கொடுத்த புகாரின் பேரில் தாரமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News