ஈமு கோழி மோசடி வழக்கில் தண்டனை பெற்று தலைமறைவாக இருந்தவர் கைது
- கடந்த 2022-ம் ஆண்டு தண்டனை விதிக்கப்பட்டது
- நாமக்கல் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீசருக்கு தகவல்
சேலம்:
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் பாப்பிசெட்டி பள்ளி அடுத்த ராசன்ன பள்ளி பகுதியைச் சேர்ந்த ஆண்ட்ரூஸ் மகன் இனோ ஆண்ட்ரூஸ் (வயது 41). இவர் மீது கடந்த 2013-ம் ஆண்டு ஈமு கோழி பண்ணை பண மோசடி தொடர்பாக நாமக்கல் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரால் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
நாமக்கல் கோர்ட்டில் வழக்கு விசாரணை முடிந்து கடந்த 2022-ம் ஆண்டு தண்டனை விதிக்கப்பட்டது. இதன்பின்னர் தலைமறை வான இவரை நாமக்கல் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் பல்வேறு இடங்களில் தேடி வந்தனர்.
இந்த நிலையில் சேலம் அன்னதானப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் சின்னதங்கம் தலைமை யிலான போலீசார் சீலநா யக்கன்பட்டி பகுதியில் உள்ள விடுதிகளில் வழக்க மான சோதனையை மேற்கொண்டனர். அப்போது ஒரு விடுதியில், நாமக்கல் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரால் தேடப்பட்டு வரும் இனோ ஆண்ட்ரோஸ் இருப்பது தெரியவந்தது.
அதைத் தொடர்ந்து, நாமக்கல் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீசருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்கள் இன்று காலை சேலத்திற்கு வந்து இனோ ஆண்ட்ரூசை கைது செய்து அழைத்துச் சென்றனர்.