உள்ளூர் செய்திகள்

சேலத்தில், 4, 5-ம் வகுப்பு ஆசிரியர்களுக்கு எண்ணும், எழுத்தும் திட்ட குறுவள மைய பயிற்சி

Published On 2023-07-11 15:19 IST   |   Update On 2023-07-11 15:19:00 IST
  • தொடக்க நிலை வகுப்பு மாணவர்களுக்கு எண்ணும், எழுத்தும் திட்டம்
  • பல்வேறு தொடர் ஆசிரியர் பயிற்சிகளை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

சேலம்:

தமிழகத்தில் கொரோனா கால கற்றல் இடைவெளியை போக்கும் வகையில், தொடக்க நிலை வகுப்பு மாணவர்களுக்கு எண்ணும், எழுத்தும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்திற்காக மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம், ஒருங்கிணைந்த பள்ளி கல்வித்துறையுடன் இணைந்து பல்வேறு தொடர் ஆசிரியர் பயிற்சிகளை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. தொடர்ந்து குறுவள மைய அளவில் பயிற்சி கூட்டம் நடக்கிறது. அதன்படி சேலம் மாவட்டத்தில் 4 மற்றும் 5-ம் வகுப்பு நடத்தும் ஆசிரியர்களுக்கு எண்ணும், எழுத்தும் திட்ட பயிற்சி கூட்டம் வருகிற 15-ந்தேதி நடக்கிறது.

Tags:    

Similar News