உள்ளூர் செய்திகள்

சேலம் இரும்பாலையில் காப்பர் பைப்புகள் திருட்டு

Published On 2022-09-13 09:07 GMT   |   Update On 2022-09-13 09:07 GMT
  • ஏ.சி.க்கு பயன்படுத்திய ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள காப்பர் பைப்புகள் குவித்து வைக்கப்பட்டு இருந்தது.
  • இதை அறிந்த மர்ம கும்பல் 3 மோட்டார்சைக்கிள்களில் அங்கு வந்து, காப்பர் பைப்புகளை மூட்டையாக கட்டி எடுத்து சென்றனர்.

சேலம்:

சேலத்தில் உள்ள உருக்காலை இந்திய அரசுக்கு சொந்தமானதாகும். இங்குள்ள வளாகத்தில் கட்டப்பட்டிருக்கும் பாரதி ஹால், கலையரங்கம் ஆகியவற்றில் ஏ.சி.க்கு பயன்படுத்திய ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள காப்பர் பைப்புகள் குவித்து வைக்கப்பட்டு இருந்தது.

இதை அறிந்த மர்ம கும்பல் 3 மோட்டார்சைக்கிள்களில் அங்கு வந்து, காப்பர் பைப்புகளை மூட்டையாக கட்டி எடுத்து சென்றனர்.

இது குறித்து உருக்காலை பாதுகாப்பு பணி மேற்கொள்ளும் செக்யூரிட்டி ஏெஜன்சியின் சீனியர் மேலாளர் தீபர்க்கி சுரேஷ் (வயது 50), இரும்பாலை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மர்ம கும்பலை கண்டுபிடிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். உருக்காலை வளாகம், நுழைவு வாயில் உள்ளிட்டவைகளில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. காமிரக்களில் மர்ம கும்பலின் உருவம் பதிவாகியுள்ளதா? என கண்டறிய போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News