உள்ளூர் செய்திகள்

பறிமுதல் செய்யப்பட்ட மீன்களை உஅணவு அதிகாரிகள் ஆய்வு செய்த காட்சி.

சேலம் மீன் சந்தையில்ரசாயனம் கலக்கப்பட்ட 130 கிலோ மீன்கள் பறிமுதல்

Published On 2023-05-03 09:22 GMT   |   Update On 2023-05-03 09:22 GMT
  • சேலம் சூரமங்கலம் பகுதியில் மீன் சந்தை உள்ளது.
  • ஏராளமான மீன் கடைகள் உள்ளன. கடல்மீன், ஆற்று மீன்கள் உள்ளிட்ட பல்வேறு ரக மீன்கள் இங்கு விற்பனை செய்யப்படுகின்றன.

சேலம்:

சேலம் சூரமங்கலம் பகுதியில் மீன் சந்தை உள்ளது. இங்கு ஏராளமான மீன் கடைகள் உள்ளன. கடல்மீன், ஆற்று மீன்கள் உள்ளிட்ட பல்வேறு ரக மீன்கள் இங்கு விற்பனை செய்யப்படுகின்றன.

இங்கு ரசாயனம் கலக்கப்பட்ட மீன்கள் விற்கப்படுவதாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

இதை தொடர்ந்து அதிகாரிகள் அங்கு அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அங்கு தடை செய்யப்பட்ட பார்மாலின் ரசாயனம் கலக்கப்பட்ட மீன் விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.

பார்மாலின் ரசாயனம் என்பது ஆய்வகத்தில் இறந்த உடல்களை பதப்படுத்துவதற்கு பயன்படுத்துவதாகும். மீன்களில் இதை உபயோ கித்தால் அந்த மீன்களை சாப்பிடு வோருக்கு பல்வேறு நோய்கள் ஏற் படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதை தொடர்ந்து பார்பாலின் ரசாயனம் கலக்கப்பட்ட 130 கிலோ மீன்கள் பறிமுதல்.

Tags:    

Similar News