சேலம் மாவட்டத்தில் குற்றங்களை கட்டுப்படுத்த கூடுதல் போலீசார் நியமிக்கப்படுவார்களா?
- வாழப்பாடியை தலைமையிடமாக கொண்டு, 2005-ம் ஆண்டு செப்டம்பர் 24–-ந்தேதி, தனி காவல் உட்கோட்டம் அமைக்கப்பட்டது.
- காவலர்களின் பணிச்சுமையும், வழக்குகளின் கோப்புகள் தேக்கமும் ஏற்படுகிறது.
வாழப்பாடி:
சட்டம்-ஒழுங்கை காக்கவும், குற்றங்கள் நடைபெறாமல் தடுக்கவும், குற்றவாளிகளை கைது செய்து சட்டத்தின் முன்னால் நிறுத்தவும் காவல்துறை தீவிர பணியாற்றி வருகிறது.
சேலம் மாவட்டம் வாழப்பாடியை தலைமை யிடமாக கொண்டு, 2005-ம் ஆண்டு செப்டம்பர் 24–-ந்தேதி, தனி காவல் உட்கோட்டம் அமைக்கப்பட்டது. வாழப்பாடி, காரிப்பட்டி, ஏத்தாப்பூர் கருமந்துறை மற்றும் கரியக்கோயில் ஆகிய 5 காவல் நிலையங்களும், வாழப்பாடியில் ஒரு அனைத்து மகளிர் காவல் நிலையம் உள்பட மொத்தம் 6 காவல்நிலையங்கள் இந்த உட்கோட்டத்தில் இடம் பெற்றுள்ளன.
உட்கோட்ட தலைமையிடமான வாழப்பாடி காவல் நிலையத்திற்கு 30 ஆண்டுக்கு முந்தைய கணக்குப்படி இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் ஏட்டுகள், காவ லர்கள் உள்ளிட்ட 38 பணியி டங்களும், காரிப்பட்டி காவல் நிலையத்திற்கு இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர்கள் உட்பட 31 போலீசாரும், ஏத்தாப்பூர் மற்றும் கல்வராயன்மலை கருமந்துறை காவல் நிலை யத்திற்கு இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர்கள், காவலர்கள் உள்பட தலா 30 பணியிடங்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
கல்வராயன் மலை கருமந்துறை இன்ஸ்பெக்டர் கட்டுப்பாட்டில் உள்ள கரியக்கோயில் காவல் நிலையத்திற்கு சப்-இன்ஸ்பெக்டர் தலைமை யில் 28 போலீஸ் பணியி டங்களும், வாழப்பாடி அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர்கள் பெண் காவலர்கள் உள்பட 17 பணியிடங்களும் ஏற்படுத்தப்பட்டன. 30 ஆண்டுகளில் மக்கள் தொகை 2 மடங்காக உயர்ந்துள்ள நிலையில், இதற்கேற்ப காவலர்கள் எண்ணிக்கை அதிகரிக்கப்படவில்லை.
இதுமட்டுமின்றி, ஒதுக்கீடு செய்யப்பட்ட பணியிடங்களிலும் 10 சதவீதற்கு மேல் காலியாக உள்ள நிலையில், நீதிமன்ற அலுவல், வாகன ஓட்டுநர், காவல் நிலைய சென்ட்ரி, பாரா, எழுத்தர், கம்ப்யூட்டர் ஆப்ரேட்டர் பணிகளுக்கு ஒதுக்கப்பட்வர்கள் தவிர்த்து, தினந்தோறும் பாதிக்கு குறைவான அளவிலேயே காவலர்கள் சட்டம் ஒழுங்கு மற்றும் ரோந்து பணிகளை மேற்கொள்ள முடிகிறது.
இதனால், காவலர்களின் பணிச்சுமையும், வழக்குகளின் கோப்புகள் தேக்கமும் ஏற்படுகிறது. இதுமட்டுமின்றி, அந்தந்த காவல் நிலையங்களின் எல்லைக்குட்பட்ட அனைத்து கிராமங்களிலும் இரவு நேர ரோந்து பணிகள் மேற்கொள்வது, வாகன தணிக்கை , சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு பணிகளை மேற்கொள்வதில் சுணக்கம் ஏற்படுகிறது.
எனவே, வாழப்பாடி காவல் உட்கோட்டத்திற்கு உட்பட்ட6 காவல் நிலை யங்களிகளிலும், காலியாக உள்ள அனைத்து பணியி டங்களையும் நிரப்பவும், அதிகரித்து வரும் புதிய குடியிருப்பு பகுதிகள், தொழிற்சாலை, வணிக நிறுவனங்கள் மற்றும் மக்கள் தொகைக்கேற்ப, கூடுதல் பணியிடங்களை உருவாக்கி போதிய போலீசார் நிய மிக்கவும், சேலம் மாவட்ட காவல்துறையும் மற்றும் தமிழக அரசும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென, சமூக ஆர்வலர்களிடையே கோரிக்கை எழுந்துள்ளது.
இதுகுறித்து ஓய்வு பெற்ற காவலர்கள் கூறுகையில், 'வாழப்பாடி காவல் உட்கோட்டத்தில் மட்டுமின்றி மாவட்டம் முழுவதுமே 30 ஆண்டு
களுக்கு முன் ஒதுக்கப்பட்ட பணியி டங்களிலேயே இன்றும் உள்ளது. பணி யிடங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படவில்லை. இதிலும் பல பணியிடங்கள் காலியாக உள்ளது. டிஎஸ்பி அலுவலகத்திற்கென தனியாக பணியாளர்கள் நியமிக்கப்படுவதில்லை. இதனால், காவல் நிலை
யங்களுக்கு நிய மிக்கப்பட்டுள்ள போலீசாரே அங்கும் பணிபுரிகின்றனர்.
இந்நிலையில் தற்போது, குடியிருப்புகள், வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் மற்றும் மக்கள் தொகை யும் இரு மடங்கு உயர்ந்துள்ளது. இதனால் போலீசாருக்கு பணிச்சுமை அதிகரித்துள்ளதோடு, கோப்புகளும் தேக்கமடை யும் நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே, காலி பணியிடங்களை நிரப்பவும், மக்கள் தொகைக்கேற்ப கூடுதல் பணியிடங்களை ஏற்படுத்தவும், உயரதிகாரிகள் புள்ளி விபரங்களோடு பட்டியலிட்டு அரசுக்கு அறிக்கை சமர்பித்தால், எதிர்வரும் காலங்களில் காவலர்களின் பணிச்சுமை குறைவதோடு, சட்டம், ஒழுங்கு, பாதுகாப்பு பணிகளையும் சுணக்கமின்றி நிறைவேற்ற முடியும்' என்றனர்.