உள்ளூர் செய்திகள்

சேலம் கோட்டை மாரியம்மன் கோவில் அறங்காவலர் குழுவினர் பதவியேற்பு விழா இன்று நடைபெற்றது. அவர்களுக்கு மத்திய மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் எம்.எல்.ஏ. வாழ்த்து தெரிவித்த காட்சி.

அறங்காவலர் குழு தலைவராக தொழிலதிபர் சக்திவேல் பதவியேற்பு

Published On 2023-07-19 15:09 IST   |   Update On 2023-07-19 15:09:00 IST
  • சேலம் கோட்டை மாரியம்மன் கோவில் அறங்காவலர் குழு தலைவராக தொழிலதிபர் எஸ்.டி சக்திவேல் ஒரு மனதாக தேர்வு பெற்றார்.
  • இன்று காலை கோட்டை மாரியம்மன் கோவில் இணை ஆணையர் அலுவலகத்தில் பதவி ஏற்றுக்கொண்டார்.

சேலம்:

சேலம் கோட்டை மாரியம்மன் கோவில் அறங்காவலர் குழு தலைவராக தொழிலதிபர் எஸ்.டி சக்திவேல் ஒரு மனதாக தேர்வு பெற்றார்.

அவர் இன்று காலை கோட்டை மாரியம்மன் கோவில் இணை ஆணையர் அலுவலகத்தில் பதவி ஏற்றுக்கொண்டார்.

அவரைத் தொடர்ந்து உறுப்பினர்கள் ஜெய், ரமேஷ்பாபு, வினிதா சுரேஷ்குமார் ஆகியோரும் பதவி ஏற்று கொண்டனர். அவர்களுக்கு மத்திய மாவட்ட செயலாளர் வக்கீல் ராஜேந்திரன் எம்.எல்.ஏ பூங் கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார். இதில் மேயர் ராமச்சந்திரன், மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் ஆர்.பி. முருகன், மாவட்ட துணைச் செயலாளர் குமரவேல், செயற்குழு கே.டி மணி, பகுதி செயலாளர்கள் சாந்தமூர்த்தி, பிரகாஷ், தமிழரசன், ஜெகதீஷ் மாநக ரத் துணைச் செயலாளர் எஸ்.டி குமார், பொதுக் க்குழு உறுப்பினர் சத்யா குமார், த.மா.கா மாவட்ட தலைவர் உலக நம்பி, மாநில இணைசெயலாளர் சின்னதுரை மற்றும் கோவில் இணை ஆணை யர் சபர்மதி, செயல் அலுவலர் அமுதசுரபி, உதவி ஆணையர் ராஜா ஆய்வாளர் உமா மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News