உள்ளூர் செய்திகள்

வீடு புகுந்து 38 பவுன் கொள்ளை வழக்கில் 2 பேர் கைது

Published On 2023-06-21 15:32 IST   |   Update On 2023-06-21 15:32:00 IST
  • சேலம் மரவனேரி பகுதியில் உள்ள ஒரு வீட்டில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு, வீட்டின் பூட்டை உைத்து மர்ம நபர்கள் 38 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்றனர்.
  • சேலம் மாவட்டம் காரிப்பட்டி போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் உள்ள ஒரு வீட்டிலும் 6 1/2 பவுன் தங்க நகைகளை திருடியது தெரியவந்தது.

சேலம்:

சேலம் மரவனேரி பகுதியில் உள்ள ஒரு வீட்டில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு, வீட்டின் பூட்டை உைத்து மர்ம நபர்கள் 38 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்றனர்.

இதுகுறித்து அஸ்தம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வந்த நிலையில், இன்று காலை இந்தக் கொள்ளை வழக்கில் தொடர்புடைய, கடலூர் மாவட்டம் நடுவீரப்பட்டு பகுதியைச் சேர்ந்த ஜெயராமன் மகன் ரஞ்சித் (வயது 25), கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அடுத்த சோமாசிபாளையம் பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணி மகன் குமரவேல் (23) ஆகிய இருவரையும் கைது செய்தனார்.

மேலும் அவர்களிடம் இருந்து 20 பவுன் நகைகளை போலீசார் மீட்டுள்ளனர். இந்த கொள்ளை சம்பவத்தில் தொடர்புடைய மற்றொருவரையும் தேடி வருகின்றனர். போலீசார் விசாரணையில், இந்த கொள்ளையர்கள் சேலம் மாவட்டம் காரிப்பட்டி போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் உள்ள ஒரு வீட்டிலும் 6 1/2 பவுன் தங்க நகைகளை திருடியது தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் பிடிபட்டவர்களிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News