உள்ளூர் செய்திகள்

நரிக்குறவர் இன மக்கள் 74 பேருக்கு ஜாதி சான்றிதழ் வழங்கப்பட்டது.

நரிக்குறவர் இன மக்களுக்கு பழங்குடியினர் ஜாதி சான்று

Published On 2023-06-20 12:36 IST   |   Update On 2023-06-20 12:36:00 IST
  • ஆரூர்பட்டி கிராமம் வெள்ளக்கல்பட்டி பகுதியில் 48 நரிக்குறவர் இன குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
  • அரசு இவர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கி புதிய தனித்தனி வீட்டுகள் கட்டி வருகிறது.

தாரமங்கலம்:

தாரமங்கலம் அருகிலுள்ள ஆரூர்பட்டி கிராமம் வெள்ளக்கல்பட்டி பகுதியில் 48 நரிக்குறவர் இன குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

அரசு இவர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கி புதிய தனித்தனி வீட்டுகள் கட்டி வருகிறது. மேலும் இந்த நரிக்குறவர் இன மக்கள் அரசின் பல்வேறு சலுகைகளை பெற்று பொருளாதார மேம்பாடு அடைய அரசு பல்வேறு உதவிகளை செய்து வருகிறது.

மிகவும் பிற்படுத்தபட்ட வகுப்பில் இருந்த இந்த நரிக்குறவர் இன மக்களை பழங்குடியினர் இன பட்டியலுக்கு மாற்றி அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சேலம் வந்தபோது தாரமங்கலம் பகுதியில் வசிக்கும் நரிக்குறவர் இன மக்கள் 74 பேருக்கு ஜாதி சான்றிதழ் வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து மீதமுள்ள நபர்கள் 32 பேருக்கு நேற்று ஆரூர்பட்டியில் உள்ள அவர்களின் குடியிருப்பு பகுதிக்கு நேரில் சென்ற மேட்டூர் ஆர்.டி.ஓ. தனிகாசலம் ஜாதி சான்றிதழை வழங்கினார். அப்போது தாரமங்கலம் வருவாய் ஆய்வாளர் முருகேசன். வி.ஏ.ஓ.க்கள் கீர்த்திவாசன். ரவிச்சந்திரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News