உள்ளூர் செய்திகள்

வாழப்பாடியில் தமிழக பகுதி நேர சிறப்பாசிரியர்கள் சங்க ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றபோது எடுத்த படம்.

பகுதி நேர சிறப்பாசிரியர்கள் சங்க ஆலோசனை கூட்டம்

Published On 2023-09-18 07:41 GMT   |   Update On 2023-09-18 07:41 GMT
  • தமிழக பகுதி நேர சிறப்பாசிரியர்கள் சங்கத்தின் வட்டார ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
  • இக்கூட்டத்திற்கு வாழப்பாடி ஓவிய ஆசிரியர் ஓ.ப.முருகன் தலைமை வகித்தார். பேளூர் சுரேஷ் வரவேற்றார்.

வாழப்பாடி:

சேலம் மாவட்டம் வாழப்பாடியில் தமிழக பகுதி நேர சிறப்பாசிரியர்கள் சங்கத்தின் வட்டார ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு வாழப்பாடி ஓவிய ஆசிரியர் ஓ.ப.முருகன் தலைமை வகித்தார். பேளூர் சுரேஷ் வரவேற்றார். பகுதி நேர சிறப்பாசிரியர்கள் செல்வம், நந்தகுமார், கிரேசி குமாரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாவட்ட செயலாளர் ராமகேசவன், பொருளாளர் காதர் மொய்தீன், உயர்மட்டக்குழு உறுப்பினர் சங்கீதா ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பாசிரியர்களின் பணி நிரந்தர கோரிக்கை போராட்டம் குறித்து ஆலோசனை வழங்கினர்.

பகுதி நேர சிறப்பாசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி வருகிற 25-ந் தேதி சென்னையில் நடைபெறும் காலவரையற்ற காத்திருப்பு உண்ணாவிரதப் போராட்டத்தில் அனைவரும் தவறாமல் கலந்து கொள்வதென இக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நிறைவாக சிறப்பாசிரியர் சங்கர் கணேஷ் நன்றி கூறினார்.

Tags:    

Similar News