உள்ளூர் செய்திகள்
- மேட்டூர் அருகே மேச்சேரியில் செம்மண் கடத்தப்படுவதாக கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு புகார் சென்றது.
- சேலம் கனிம வள தனி வருவாய் ஆய்வாளர் பிரசாத் தலைமையிலான அலுவலர்கள், மேச்சேரியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
மேட்டூர்:
மேட்டூர் அருகே மேச்சேரியில் செம்மண் கடத்தப்படுவதாக கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு புகார் சென்றது. அதன்பேரில், சேலம் கனிம வள தனி வருவாய் ஆய்வாளர் பிரசாத் தலைமையிலான அலுவலர்கள், மேச்சேரியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். குறிப்பாக, தொப்பையாறு பகுதியில் இருந்து வரும் வாகனங்களை தீவிர சோதனை செய்தனர்.
அப்போது, அந்த வழியாக வந்த டிப்பர் லாரியை நிறுத்த அதிகாரிகள் முயன்றபோது, லாரியை நிறுத்தி விட்டு, ஓட்டுநர் தப்பியோடினார். இதையடுத்து லாரியை சோதனை செய்ததில் 3 யூனிட் செம்மண் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
லாரியை கைப்பற்றிய அதிகாரிகள் மேச்சேரி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.