உள்ளூர் செய்திகள்

 சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு நடந்தபோது எடுத்தபடம்.

சேலம் மாவட்டத்தில் உள்ள அரசு கலை கல்லூரிகளில் இன்று சிறப்பு கலந்தாய்வு தொடங்கியது

Published On 2023-05-29 09:27 GMT   |   Update On 2023-05-29 09:27 GMT
  • உயர் கல்வித்துறையின் கல்லூரி கல்வி இயக்குநரகத்தின் கீழ் 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன.
  • நடப்பாண்டு இளநிலை படிப்புகளில் சேருவதற்கான மாணவ- மாணவிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன.

சேலம்:

தமிழகத்தில் உயர் கல்வித்துறையின் கல்லூரி கல்வி இயக்குநரகத்தின் கீழ் 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இக்கல்லூரிகளில் நடப்பாண்டு இளநிலை படிப்புகளில் சேருவதற்கான மாணவ- மாணவிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன. இதில், சேலம் வின்சென்ட்-ல் உள்ள அரசு கலை, அறிவியல் கல்லூரியில் 22 இளநிலை பாடப்பிரிவுகளில் 1,460 முதலாம் ஆண்டு இடங்கள் உள்ளன. இதில் சேர 22,913 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

இதே போல், கோரிமேட்டில் செயல்பட்டு வரும் அரசு மகளிர் கலைக்கல்லூரியில், 13 இளநிலை பாடப்பிரிவுகளில் 964 இடங்கள் உள்ளன. இதில் சேர்க்கை பெற 8,322 பேர் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துள்ளனர்.

நடப்பாண்டு மாணவர் சேர்க்கைக்கான முதற்கட்ட கலந்தாய்வு இன்று தொடங்கியது.

முதல் நாளான இன்று காலை அனைத்து பாடப்பிரி வுகளுக்கான மாற்றுத்தி றனாளிகள், விைளயாட்டு வீரர்கள், முன்னாள் ராணு வத்தி னரின் வாரிசு, தேசிய மாணவர் படையினர் உள்ளிட்ட சிறப்பு பிரிவின ருக்கான கலந்தாய்வு நடை பெற்றது.

இதில் பங்கேற்ப தற்காக கல்லூரிகளில் மாணவ-மாணவிகள் குவிந்தனர். அவர்களின் கல்வி சான்றிதழ், சாதி சான்றிதழ் உள்ளிட்ட அசல் சான்றிதழ் பெறப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது. வருகிற 3-ந்தேதி இளநிலை பட்டப்படிப்புகளான கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், புள்ளியியல், புவியியல், புவியமைப்பியல், கணினி பயன்பாட்டியல் உள்ளிட்ட பாடப்பிரிவு களுக்கு கலந்தாய்வு நடக்கிறது.

Tags:    

Similar News