உள்ளூர் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்.

குறிச்சியில் பட்டா வழங்கக்கோரி குழந்தைகள், கால்நடைகளுடன் ஊர்வலமாக சென்று உண்ணாவிரதம்

Published On 2023-06-20 13:32 IST   |   Update On 2023-06-20 13:32:00 IST
  • வாழப்பாடியை அடுத்த குறிச்சி கிராமத்தில் 2 சமூக மக்கள் வசித்து வரும் குடியிருப்பு பகுதியை, வருவாய்த்துறை யூ.டி.ஆர். நில உடமை பதிவேடுகளில் நெடுஞ்சாலை புறம்போக்கு என வகைப்பாடு செய்தனர்.
  • இதனால் இப்பகுதி மக்கள் வீடுகளுக்கு இலவச வீட்டு மனை பெற முடியாத நிலை ஏற்பட்டது.

வாழப்பாடி:

வாழப்பாடியை அடுத்த குறிச்சி கிராமத்தில் 2 சமூக மக்கள் வசித்து வரும் குடியிருப்பு பகுதியை, வருவாய்த்துறை யூ.டி.ஆர். நில உடமை பதிவேடுகளில் நெடுஞ்சாலை புறம்போக்கு என வகைப்பாடு செய்தனர். இதனால் இப்பகுதி மக்கள் வீடுகளுக்கு இலவச வீட்டு மனை பெற முடியாத நிலை ஏற்பட்டது.

இதுகுறித்து வருவாய்த்துறை அதிகாரிகளை பலமுறை அணுகியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிகிறது. இதையடுத்து இப்பகுதி மக்கள், குழந்தைகள், கால்நடை களுடன் ஊர்வலமாக சென்று, பேருந்து நிறுத்தத்தில் காமராஜர், அண்ணா, எம்.ஜி.ஆர் சிலை களுக்கு அருகே அமர்ந்து உண்ணாவிரதப் போராடத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவலறிந்த வருவாயத்துறையினர் மற்றும் காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்ட வர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

ஓரிரு மாதங்க ளில் நிலஉடமை பதிவேடு களில் தேவையான மாற்றங் களை செய்து பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்ததால், பொதுமக்கள் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனர்.

Tags:    

Similar News