உள்ளூர் செய்திகள்

உரிய அனுமதி பெறாமல் நடத்தப்பட்ட விநாயகர் சிலை ஊர்வலத்தை போலீசார் தடுத்து நிறுத்திய காட்சி.

நங்கவள்ளியில் அனுமதியின்றி விநாயகர் சிலை ஊர்வலம்

Published On 2023-09-20 07:42 GMT   |   Update On 2023-09-20 07:42 GMT
  • விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இந்து முன்னணி சார்பில் பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு செய்யப்பட்டது.
  • அனுமதி இல்லாமல் விநாயகர் சிலை ஊர்வலத்தில் ஈடுபட்ட இந்து முன்னனி கோட்ட பொறுப்பாளர் பழனிசாமி உள்பட 26 பேரை போலீசார் கைது செய்தனர்.

மேட்டூர்:

சேலம் மாவட்டம் மேட்டூர் அடுத்த நங்கவள்ளியில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இந்து முன்னணி சார்பில் பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு செய்யப்பட்டது.

இதையடுத்து வழிபாடு செய்த விநாயகர் சிலைகளை காவிரி ஆற்றில் கரைப்பதற்காக 30-க்கும் இந்து முன்னணியினர் வனவாசி, தானபதியூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஊர்வலமாக சென்றனர்.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு ஓமலூர் டி.எஸ்.பி. சங்கீதா தலைமையில் ஏராளமான போலீசார் வந்தனர். உரிய அனுமதி பெறாமல் விநாயகர் சிலை ஊர்வலம் நடத்தக்கூடாது என போலீசார் தெரிவித்தனர்.

இதற்கு இந்து முன்னணியினர் எதிர்ப்பு தெரிவித்ததால் அங்கு பரபரப்பு நிலவியது. இதனையடுத்து அனுமதி இல்லாமல் விநாயகர் சிலை ஊர்வலத்தில் ஈடுபட்ட இந்து முன்னனி கோட்ட பொறுப்பாளர் பழனிசாமி உள்பட 26 பேரை போலீசார் கைது செய்தனர்.

Tags:    

Similar News