உள்ளூர் செய்திகள்

சேலத்தில் ஐவர் பூப்பந்தாட்ட போட்டிகள்

Published On 2023-05-28 14:01 IST   |   Update On 2023-05-28 14:01:00 IST
  • சேலம், நாமக்கல், தரும புரி மாவட்டங்களுக்கு இடையே யான ஆடவர் ஐவர் பூப்பந்தாட்ட போட்டி சேலம் ஒய்.எம்.சி.ஏ.மை தானம், குகை சங்கீத் தியேட்டர் அருகில் உள்ள பொதுந லப்பிரியர் சங்க மைதானம் ஆகிய 2 இடங்களில் நடை பெற்றது.
  • போட்டிகள் தேசிய நடுவர் திருச்சி கலி புல்லா, மாநில நடுவர்கள் ராஜராஜன், சச்சிதானந்தம் முன்னிலையில் நடைபெற்றது.

சேலம்:

சேலம், நாமக்கல், தருமபுரி மாவட்டங்களுக்கு இடையேயான ஆடவர் ஐவர் பூப்பந்தாட்ட போட்டி சேலம் ஒய்.எம்.சி.ஏ.மை தானம், குகை சங்கீத் தியேட்டர் அரு கில் உள்ள பொதுந லப்பிரியர் சங்க மைதானம் ஆகிய 2 இடங்களில் நடை பெற்றது. இதில் மொத்தம் 22 அணி கள் கலந்து கொண்டன.

தொடக்க விழாவில் மோதி லால் பூப்பந்து குழுவின் தலைவர் ராஜசேகர், செயலாளர் வெங்கடரமணன், துணை தலைவர் யுவராஜ், துணை செயலாளர்கள் சுரேஷ், கார்த்தி, மூத்த உறுப்பினர் சுப்பிர மணி உள்பட பலர் கலந்து கொண்டனர். போட்டிகள் தேசிய நடுவர் திருச்சி கலி புல்லா, மாநில நடுவர்கள் ராஜராஜன், சச்சிதானந்தம் முன்னிலையில் நடைபெற்றது.

இதில் தருமபுரி அணி முதல் இடத்தையும், சேலம் மோதிலால் பி அணி 2-ம் இடத்தையும், மாஞ்சோலை அணி 3-வது இடத்தையும், மோதிலால் ஏ அணி 4-வது இடத்தையும் பிடித்தன. வெற்றிபெற்ற அணிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. 

Tags:    

Similar News