சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் இரும்பு கூண்டு எடுத்து வந்த காட்சி.
காடையாம்பட்டி அருகே சிறுத்தை நடமாட்டம்?
- மூக்கனூர் வனப்பகுதியில் இரும்பு கூண்டில் ஆட்டுக்குட்டி ஒன்றை அடைத்து வைத்து கண்காணித்து வருகின்றனர்.
- கண்காணிப்பு கேமரா வைத்து சிறுத்தை நட மாட்டம் உள்ளதா?என கண்கா ணித்து வந்தனர்
காடையாம்பட்டி
சேலம் மாவட்டம் காடை யாம்பட்டி அருகே டேனிஷ் பேட்டை வனசரகம் உள்ளது.
சிறுத்தை நடமாட்டம்: இங்குள்ள மூக்கனூர், எலத்தூர், தேன்கல்கரடு உள்ளிட்ட வனப்பகுதியில் கடந்த 1 மாதத்திற்கு முன்பு சிறுத்தை நடமாட்டம் இருப்பதாகவும் ஆடுகளை கடித்து இழுத்துச் சென்ற தாகவும் பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். அதைத்தொடர்ந்து டேனிஷ்பேட்டை வனசரக அலுவலர்கள் இந்த வனப்பகு திகளில் 4 இடங்களில் கண்காணிப்பு கேமரா வைத்து சிறுத்தை நட மாட்டம் உள்ளதா?என கண்கா ணித்து வந்தனர். ஆனால் கேமிரா வில் எதுவும் பதிவாகவில்லை.
இந்த நிலையில் நேற்று முன்தினம் மூக்கனூர் பணக்கார கொட்டாய் பகு தியை சேர்ந்த முத்து என்பவரது தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த ஒருவர் கரட்டுப்பகுதி உச்சியில் சிறுத்தை நட மாட்டம் இருப்பதாக டேனிஷ்பேட்டை வனத் துறைக்கு தகவல் தெரி வித்தார்.கிராம மக்கள் மனு: மேலும் இதுதொடர்பாக சேலம் மாவட்ட வன அலுவ லரையும் சந்தித்து மூக்கனூர் கிராமத்தில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாகவும், அதை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கிராம மக்கள் மனு கொடுத்த னர்.
இரும்பு கூண்டு: அதைத்தொடர்ந்து நேற்று டேனிஷ்பேட்டை வனத்துறை யின் மூக்கனூர் வனப்பகுதி யில் இரும்பு கூண்டில் ஆட்டுக்குட்டி ஒன்றை அடைத்து வைத்து கண்காணித்து வருகின்றனர். மேலும் அந்த பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருக்கிறதா? என மாவட்ட வன அலுவலர் காஷ்யப் சஷாங்க் ரவி இன்று ஆய்வு செய்கிறார்.