உள்ளூர் செய்திகள்

தெப்பக்குளம் விநாயகர் கோவிலை படத்தில் காணலாம்.

சேலம் அரிசிபாளையம் தெப்பக்குளம் விநாயகர் கோவிலில் துணிகர திருட்டு

Published On 2023-03-08 15:24 IST   |   Update On 2023-03-08 15:24:00 IST
  • சேலம் அரிசிபாளையம் தெப்பகுளம் அருகில் விநாயகர் கோவில் உள்ளது.
  • கோவில் உள்ள வெண்கல தட்டு, டம்ளர், பித்தளை மணி மற்றும் பூஜை பொருட்களை கேட் மேல் ஏறி குதித்து யாரோ மர்ம ஆசாமி திருடி சென்றதை அறிந்து அதிர்ச்சி அடைந்தனர்.

சேலம்:

சேலம் அரிசிபாளையம் தெப்பகுளம் அருகில் விநாயகர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் தினமும் 5 மணிக்கு நடை திறக்கப்பட்டதும் பக்தர்கள் கோவிலை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபடுவது வழக்கம். இங்கு பாதுகாப்புக்காக கோவிலை சுற்றி கம்பியால் காம்பவுண்டு போடப்பட்டுள்ளது.

நேற்று வழக்கம்போல் பூசாரி மற்றும் பக்தர்கள் கோவிலுக்கு சென்றனர். அப்போது கோவில் உள்ள வெண்கல தட்டு, டம்ளர், பித்தளை மணி மற்றும் பூஜை பொருட்களை கேட் மேல் ஏறி குதித்து யாரோ மர்ம ஆசாமி திருடி சென்றதை அறிந்து அதிர்ச்சி அடைந்தனர்.

கோவில் உண்டியலில் இருக்கும் பணத்தை கொள்ளையடித்து செல்லும் எண்ணத்துடன் வந்த திருடன் உண்டியல் இல்லாததால் அங்கிருந்த பொருட்களை எடுத்து சென்றுள்ளான். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

கோவில் வாசலில் கண்காணிப்பு காமிரா பொருத்தப்பட்டுள்ளது. அருகில் உள்ள கோவில்களில் பண்டிகை என்றால் இந்த கோவிலுக்கு வந்து சக்தி அழைப்பது வழக்கம். ஆண்டுதோறும் மார்கழி மாதம் அதிகாலை 4 மணிக்கே கோவில் நடை திறந்து சிறப்பு அலங்காரம் செய்யப்படும். இந்த கோவிலில் திருட்டு போய் இருப்பது அந்த பகுதி மக்களிடையே ச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு அரிசிபாளையம் சுளுக்கு பிள்ளையார் கோவிலுக்கு பக்தர்கள் கொடுத்த கோவில் மாடு திருட்டு போனது. கோவில்களில் தொடர்ந்து திருட்டுகள் நடப்பதால் இந்த செயல்களில் ஈடுபடும் மர்ம நபர்களை போலீசார் கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்கவேண்டும்.

மேலும் இதுபோல் திருட்டு சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க இரவு நேரங்களில் 12 மணிக்குமேல் அதிகாலை 4 மணிக்குள் போலீஸ் ரோந்து பணியை அதிகரிக்க வேண்டும் என்று கோவி லுக்கு வரும் பக்தர்களும், பொதுமக்களும் கூறுகிறார்கள்.

Tags:    

Similar News