உள்ளூர் செய்திகள்

பொதுமக்களிடம் அதிகாரிகள் விழிப்புணர்வு விளக்கம் அளித்தனர்.

நிலக்கோட்டையில் பிளாஸ்டிக் அரிசி விற்பனை செய்யப்படுவதாக வதந்தி - வீடு வீடாக அதிகாரிகள் விழிப்புணர்வு

Published On 2023-10-20 06:09 GMT   |   Update On 2023-10-20 06:09 GMT
  • எத்திலோடு ஊராட்சி பகுதிகளில் உள்ள ரேசன் கடைகளில் வாங்கப்பட்ட அரிசி தண்ணீரில் மிதப்ப தாக பொதுமக்கள் குற்றம்சாட்டினர்.
  • அதிகாரிகள் வீடுவீடாக சென்று பொதுமக்களிடம் அதிக சத்துள்ள செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கப்படுவதால் தண்ணீரில் மிதப்பதாக விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

நிலக்கோட்டை:

நிலக்கோட்டை அருகே எத்திலோடு ஊராட்சி பகுதிகளில் உள்ள ரேசன் கடைகளில் வாங்கப்பட்ட அரிசி தண்ணீரில் மிதப்ப தாக பொதுமக்கள் குற்றம்சா ட்டினர். எனவே பிளாஸ்டிக் அரிசி இதில் கலந்துள்ளதா என சந்தேக மடைந்து ஊழி யர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட னர்.

இந்த செய்தி அப்பகுதியில் வேகமாக பரவியது. ரேசன் கடையில் வழங்கப்படும் அரிசியில் பிளாஸ்டிக் அரிசிஉள்ளதாக வதந்தி பரவியது. இதனை தொடர்ந்து நிலக்கோட்டை வட்ட வழங்கல் அலுவலர் தங்கேஸ்வரி ரேசன்கடை களில் ஆய்வு செய்தார்.

அதில் செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கப்படுவதால் தண்ணீரில் மிதப்பது தெரி யவந்தது. அதைதொடர்ந்து வீடுவீடாக சென்று பொதுமக்களிடம் அதிக சத்துள்ள செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கப்படுவதால் தண்ணீரில் மிதப்பதாக விழிப்புணர்வு ஏற்படுத்தி னர்.

இேதபோல் அனைத்து ஊராட்சிகளிலும் அதிகாரிகள் விழிப்புணர்வு விளக்கம் அளித்தனர். இந்த ஆய்வின்போது கூட்டுறவு த்துறை தனிசார்பதிவாளர் பாஸ்கரன், தனிவருவாய் ஆய்வாளர் சரவணமுத்து மற்றும் ரேசன் கடை ஊழியர்கள் உடனிருந்தனர்.

Tags:    

Similar News