உள்ளூர் செய்திகள்

நெடுஞ்சாலையில் ரிப்லக்ட்டர் ஸ்டிக்கர் ஒட்டும் பணி செய்த ஆர்.டி.ஓ

Published On 2023-09-13 16:02 IST   |   Update On 2023-09-13 16:02:00 IST
  • ஸ்டிக்கர்கள் ஒட்டும் பணியை, தருமபுரி ஆர்.டி.ஓ தாமோதரன் ஆய்வு செய்தார்.
  • மின் மற்றும் சோளார் விளக்குகள் பொருத்தும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

தொப்பூர், 

தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அருகே தொப்பூர் வனப்பகுதியில் தொப்பூர் கணவாய் உள்ளது. இந்த கணவாய் வழியாக சேலம்- பெங்களூர் இடையிலான நான்கு வழி தேசிய நெடுஞ்சாலை உள்ளது.

இவ்வாறு உள்ள இந்த சாலையில் எஸ்- வளைவு, தாழ்வான சாலை பகுதிகளில் நாள்தோறும் பல்வேறு விபத்துக்களும், அதனால் உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகிறது. இதனை தடுக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி அபாய சாலை பகுதிகளை இரவு நேரத்தில் கண்டறிந்து விபத்தில்லாமல், வாகன ஓட்டிகள் கவனமாக ஓட்டும் வகையில், எஸ்-பெண்டு வளைவு, தாழ்வான சாலைப் பகுதி தெரியும் வகையில், பிரதிபலிப்பான் ஸ்டிக்கர்கள் ஒட்டும் பணியை, தருமபுரி ஆர்.டி.ஓ தாமோதரன் ஆய்வு செய்து, நேரடியாக களத்தில் இறங்கி எச்சரிக்கை செய்ய வேண்டிய அனைத்து பகுதிகளிலும் ஸ்டிக்கர்களை ஒட்டினார்.

மேலும் சாலை பராமரிப்பு ஊழியர்கள் தொப்பூர் கணவாய் சாலையின் இருபுறமும், ரிப்லேக்ட்டர் ஸ்டிக்கர் ஓட்டும் பணி, மின் மற்றும் சோளார் விளக்குகள் பொருத்தும் பணி, உள்ளிட்ட சீரமைப்பு பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

Similar News