உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்

தேனியில் மத்திய அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.7 லட்சம் மோசடி

Published On 2023-03-05 04:44 GMT   |   Update On 2023-03-05 04:44 GMT
  • மத்திய அரசில் வேலை வாங்கி தருவதாக வாலிபரிடம் ரூ.7 லட்சம் பெற்று மோசடியில் ஈடுபட்டதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
  • தேனி போலீசார் 3 பேர் மீது வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தேனி:

தேனி பங்களாமேடு பகுதியை சேர்ந்தவர் தினேஷ்குமார்(18). இவருக்கு பாரஸ்ட் ரோடு பகுதிைய சேர்ந்த கணேசன் என்பவர் பழக்கமானார்.

மத்திய அரசில் வேலை வாங்கி தருவதாக தினேஷ்குமாரிடம் கூறியுள்ளார். மேலும் இதற்கு ரூ.7 லட்சம் செலவாகும் எனக்கூறி அவரிடம் இருந்து பணத்தை பெற்றார். ஆனால் வேலை வாங்கிதராமல் இழுத்தடித்து வந்துள்ளார்.

பின்னர் போலி ஆவணத்தை தயார் செய்து வேலை உறுதி கடிதம் என கொடுத்துள்ளார். தான் ஏமாற்றப்பட்டதை அறிந்ததும் பணத்தை திருப்பி தருமாறு தினேஷ்குமார் கேட்டார். அதற்கு கணேசன் வங்கி காசோலையை ெகாடுத்துள்ளார். ஆனால் வங்கி கணக்கில் பணம் இல்லை என காசோலை திரும்பி வந்துவிட்டது.

இதுகுறித்து தேனி கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. கோர்ட்டு உத்தரவுப்படி தேனி போலீசார் கணேசன், சஞ்சய், கீதா ஆகிய 3 பேர் மீதும் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News