தொழிலதிபரிடம் ரூ.60 லட்சம் ேமாசடி
- முதலில் ரூ.3.70 லட்சம் மட்டுமே வங்கி கணக்கில் செலுத்தியுள்ளனர். மீதி பணம் கொடுக்கவில்லை.
- தான் ஏமாற்றம் அடைந்தது தெரியவந்த நிலையில் 2 பேர் குற்றப்பிரிவு போலீசில் புகார் கொடுத்தனர்.
தருமபுரி,
தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் அடுத்துள்ள பெரியாம்பட்டி பகுதியை சேர்ந்தவர் குப்புசாமி (வயது63). இவர் கிரானைட் நிறுவனம் நடத்தி வந்தார். இவரது நண்பர் திருப்பத்தூரை சேர்ந்த ஜெயசந்திரன். இவர்கள் இருவரும் கடனாக ரூ.60 லட்சம் பெற சேலம் மாவட்டம், ஜாகீர்காம நாயக்கனப்பட்டியை சேர்ந்த மணிகண்டன், ராமு, பூமி நாயக்கனப்பட்டி அருள் ஆகியோரிடம் கேட்டுள்ளனர். அவர்கள் அதற்கான ஆவணங்களை பெற்று கொண்டு உங்களது வங்கி கணக்கில் பணம் செலுத்துகிறோம் என்று கூறியுள்ளனர்.
முதலில் ரூ.3.70 லட்சம் மட்டுமே வங்கி கணக்கில் செலுத்தியுள்ளனர். ஆனால் மீதி பணம் கொடுக்கவில்லை. ஆவணங்களிலும் கையெழுத்து வாங்கி விட்டு பதிவு செய்துள்ளனர்.
இதனால் தான் ஏமாற்றம் அடைந்தது தெரியவந்த நிலையில் குப்புசாமி, ஜெயசந்திரன் ஆகியோர் தருமபுரி மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் கொடுத்தனர். அந்த பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.