காய்கறி விற்பனை மையம் அமைய உள்ள இடத்தை கம்பம் ராமகிருஷ்ணன் எம்.எல்.ஏ. பார்வையிட்டார்.
சின்னமனூரில் ரூ.37 கோடியில் மெகா காய்கறி விற்பனை வளாகம்
- இந்த வளாகத்தில் 70திற்கும் மேற்பட்ட வணிக கடைகள், விவசாயிகள் தங்கும் அறைகள், கழிப்பறைகள், வாகனங்கள் தடையின்றி வந்து செல்ல சாலை வசதி என அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்படுகிறது.
- வருகின்ற 10ந் தேதி தேனி மாவட்ட கலெக்டர் ஷஜீவனா தலைமையில் விவசாயிகள், வியாபாரிக ளுடன் ஆய்வு கூட்டம் நடத்தப்பட இருக்கிறது.
சின்னமனூர்:
தேனி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் கம்பம் ராமகிருஷ்ணன் எம்.எல்.ஏ. செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
சின்னமனூர் நகரில் முதன் முதலாக மெகா மொத்த காய்கறி வளாகம் அமைப்பதற் கான கோரி க்கையை சட்டமன்றத்தில் முதல்-அமைச்சரிடம் எடுத்து கூறினேன்.
அதனை ஏற்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அனுமதி அளித்தார். தற்போது ரூ. 37 கோடி நிதியில் சின்னமனூரில் அமைக்க உத்தரவிட்டு ள்ளார்.
தமிழகத்தில் கோவை, குனியமுத்தூர் பகுதியிலும், நாகர்கோவில் மார்த்தாண்டத்திலும் விவசாயிகள், வியாபாரிகள், பொதுமக்கள் பயன் பெறும் விதமாக மெகா காய்கறி மொத்த வளாகச் சந்தையை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
சின்னமனூரில் தமிழக த்தின் 3வது இடமாக தேனி மாவட்டத்தின் முதல் இடமாக அமைய இருக்கிறது.இந்த வளாகத்தில் 70திற்கும் மேற்பட்ட வணிக கடைகள், விவசாயிகள் தங்கும் அறைகள், கழிப்பறைகள், வாகனங்கள் தடையின்றி வந்து செல்ல சாலை வசதி என அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்படுகிறது.
இதில் விவசாயிகளுக்கு மதிப்பு கூட்டப்பட்ட விகிதத்தில் நல்ல விலை நிர்ணயமாக கிடைப்பதற்கு வழி வகை ஏற்படுத்தப்படும். வெளி நாடுகளுக்கு வாழை மற்றும் காய் கறிகளை கொண்டு செல்வதற்கு சரியான கட்டமைப்பு இல்லாததால் இங்கு உருவா க்கப்பட்டு வெளிநாடு களுக்கு அனுப்பி வைப்ப தற்கு சந்தைப்படுத்து வதற்கும் அனைத்து பணி களும் இங்கு நடைபெறும்.
அதற்காக 4 ஏக்கரில் ரூ.37 கோடி மதிப்பில் செயல் படுத்தப்பட இருக்கி றது. வருகின்ற 10ந் தேதி தேனி மாவட்ட கலெக்டர் ஷஜீவனா தலைமையில் விவசாயிகள், வியாபாரிக ளுடன் ஆய்வு கூட்டம் நடத்தப்பட இருக்கிறது. இப்பகுதியில் 14000 ஹெக்டேரில் ஜி9 வாழை, நேந்திரம், நாளிப் பூவன் உள்ளிட்ட வாழைகள் உற்பத்தி செய்யப்படுகிறது. அதிகளவில் வெளிநாடு களுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
2023- 24 ஆண்டு வேளாண்மை துறை சார்பில் ரூ.130 கோடியில் வாழை காய்கறிகளை பாதுகாக்க குளிரூட்டும் தொழிற்சாலை 5 ஏக்கரில் உருவாக்கப்பட இருக்கிறது. இதனால் விவசாயிகள், வியாபாரிகள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் பயன் அடைவார்கள்.
மின்சாரம் பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் துணை மின்நிலையம் அமைப்பதற்கு அதற்கான ஏற்பாடுகளும் நடைபெற்று வருகிறது. மேலும் 10கும் மேற்பட்ட மின் மாற்றிகள் அமைக்கப்பட்டு பழுது ஆகாத பியூஸ் போகாத ளவிற்கு சின்னமனூர் 27 வார்டுகளில் வெளிச்சத்தி ற்காக தெருவிளக்குகள் அமைக்கப்பட்டு வருகிறது.
ஒரு வருடத்திற்குள் தேனி மாவட்டம் உள்பட சின்ன மனூரில் அதிகளவு விவசா யம் நடை பெறுவதால் பெரும் வர்த்தக மையமாக சின்னமனூர் அமையும் என்று கூறினார்.
அப்போது நகர் மன்ற துணைத் தலைவர் முத்துக்குமார், சின்னமனூர் தி.மு.க. பிரமுகர் பஞ்சாப்முத்துக்குமரன், மாவட்ட விவசாய தொழி லாளர் அணி அமைப்பாளர் செந்தில்குமார், முன்னாள் மாவட்ட விவசாய அணி அக்கீம் உள்பட தி.மு.க. நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.