உள்ளூர் செய்திகள்

உண்டியல் காணிக்கையில் எண்ணப்பட்ட ரூபாய் நோட்டுகள் அடிக்கி வைக்கப்பட்டுள்ளது

பழனி கோவிலில் முதல் நாள் உண்டியல் வசூல் ரூ.1.20 கோடி கிடைத்தது

Published On 2022-06-15 05:14 GMT   |   Update On 2022-06-15 05:30 GMT
  • காணிக்கை பணம் எண்ணும் பணி கார்த்திகை மண்டபத்தில் நடைபெற்றது.
  • 500-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகள், ஆசிரியர்கள், கோவில் அலுவலர்கள் இதில் பங்கேற்றனர்.

பழனி:

பழனி கோவிலில் கடந்த 27 நாட்களில் உண்டியல்கள் நிறைந்ததை தொடர்ந்து பக்தர்கள் செலுத்திய காணிக்கை பணம் எண்ணும் பணி கார்த்திகை மண்டபத்தில் நடைபெற்றது. கோவில் நிர்வாகத்தின் புதிய உத்தரவின்படி ஆண் பணியாளர்கள் வேட்டி அணிந்து வந்திருந்தனர். மேலும் உள்ளே வரும் நேரம், வெளியே செல்லும் நேரம் ஆகியவை பதிவேட்டில் குறிப்பிடப்பட்டது.

கண்காணிப்பு காமிராக்களிலும் காணிக்கை எண்ணும் பணி கண்காணிக்கப்பட்டது. 500-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகள், ஆசிரியர்கள், கோவில் அலுவலர்கள் இதில் பங்கேற்றனர். முதல்நாள் உண்டியலில் ரொக்கமாக ரூ.1 கோடியை 80 லட்சத்து 31 ஆயிரத்து 420 கிடைத்தது. 1121 கிராம் தங்கம், 19317 கிராம் வெள்ளி, வெளிநாட்டு கரன்சிகள் 131 ஆகியவை கிடைத்தன.

உண்டியல் எண்ணும் பணியை கோவில் இணை ஆணையர் நடராஜன், துணை ஆணையர் பொறுப்பு பிரகாஷ், உதவி ஆணையர் லட்சுமி ஆகியோர் பார்வையிட்டனர். இன்று 2-வது நாளாக உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடந்து வருகிறது.

Tags:    

Similar News