உள்ளூர் செய்திகள்

புதிய வகுப்பறை கட்டிடத்தை மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளர் அப்துல்வகாப் எம்.எல்.ஏ. குத்துவிளக்கு ஏற்றி திறந்து வைத்த காட்சி. 

வண்ணார்பேட்டை மாநகராட்சி பள்ளியில் ரூ.13.60 லட்சத்தில் புதிய வகுப்பறை கட்டிடம்- அப்துல்வகாப் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்

Published On 2023-01-19 15:10 IST   |   Update On 2023-01-19 15:10:00 IST
  • நெல்லை மாநகராட்சிக் குட்பட்ட வண்ணார் பேட்டை சாலை தெரு வில் மாநகராட்சி புதிய நடு நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது.
  • இங்குள்ள ஒரு கட்டிடத்தின் முதல்தளத்தில் ரூ. 13.60 லட்சம் செலவில் புதிய வகுப்பறை கட்டப்பட்டுள்ளது.

நெல்லை:

நெல்லை மாநகராட்சிக் குட்பட்ட வண்ணார் பேட்டை சாலை தெரு வில் மாநகராட்சி புதிய நடு நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது.

புதிய வகுப்பறை

இங்குள்ள ஒரு கட்டிடத்தின் முதல்தளத்தில் ரூ. 13.60 லட்சம் செலவில் புதிய வகுப்பறை கட்டப்பட்டுள்ளது.

அதன் திறப்பு விழா இன்று நடைபெற்றது. இதில் மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளர் அப்துல் வகாப் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு புதிய வகுப்பறையை திறந்து வைத்தார்.

கலந்து கொண்டவர்கள்

நிகழ்ச்சியில் மேயர் சரவணன், துணை மேயர் கே.ஆர்.ராஜூ, மாவட்ட துணை செயலாளர் எஸ்.வி. சுரேஷ், கவுன்சிலர் கந்தன், மாநகராட்சி உதவி செயற்பொறியாளர் லெனின், சுகாதார ஆய்வாளர் சங்கர நாராய ணன், தலைமை ஆசிரியர் கஸ்தூரிபாய் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

முன்னதாக பள்ளி மாண வர்கள் சார்பில் அப்துல் வகாப் எம்.எல்.ஏ.வுக்கு தாரை தப்பட்டை முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

Tags:    

Similar News