ரூ.13.10 லட்சம் மதிப்பில் தார் சாலை அைமக்கும் பணி
- மதியழகன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
- நகராட்சி தலைவர் பரிதா நவாப் தலைமை தாங்கினார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி நகராட்சி 32-வது வார்டில் 2022-2023-ல் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் சாமுண்டீஸ்வரி திருமண மண்டபம் பின்புறம் மண் சாலை தார் சாலையாக அமைக்கப்படுகிறது. ரூ.13 லட்சத்து 10 ஆயிரம் திட்ட மதிப்பீட்டில் நடைபெற கூடிய இந்த பணிக்கான பூமிபூஜை நடந்தது.
நிகழ்ச்சிக்கு கிருஷ்ணகிரி நகராட்சி தலைவர் பரிதா நவாப் தலைமை தாங்கினார். கவுன்சிலர் சீனிவாசன் வரவேற்றார். நகர தி.மு.க. செயலாளர் எஸ்.கே.நவாப், நகராட்சி ஆணையாளர் வசந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் மதியழகன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பூமிபூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் நகராட்சி துணை தலைவர் சாவித்திரி கடலரசுமூர்த்தி, மாவட்ட தி.மு.க. துணை செயலாளர் கோவிந்தசாமி, பொதுக்குழு உறுப்பினர் அஸ்லம், மாநில விவசாய அணி துணை செய–லாளர் டேம் வெங்கடேசன், ஒன்றிய செயலாளர் கோவிந்தன், கவுன்சிலர்கள் பாலாஜி, வேலுமணி, சந்தோஷ், ஜெயக்குமார், மதன்குமார், பழனி உள்பட பலர் கலந்து கொண்டனர்.