உள்ளூர் செய்திகள்

பேக்கரியில் ரூ.7 லட்சம் மோசடி- காசாளர் கைது

Published On 2022-06-12 09:06 GMT   |   Update On 2022-06-12 09:06 GMT
  • போலி பில் மூலம் கணக்கு காட்டி ரூ.7 லட்சம் மோசடி செய்தது தெரியவந்தது.
  • போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

 கோவை:

கோவை உப்புக்கிணறு சந்து பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (29). இவர் ஆர்.எஸ்.புரம் டி.பி. ரோட்டில் உள்ள பேக்கரியில் மேலாளராக உள்ளார். அவர் ஆர்.எஸ்.புரம் போலீசில் அளித்துள்ள புகார் மனுவில் கூறியுள்ளதாவது:-

பேக்கரியில் திருச்சி வையம்பட்டி காமா ட்சியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஜெகநாதன் (42) என்பவர் கடந்த 6-6-2021 முதல் 24-4-2022 வரை காசாளராக வேலை பார்த்து வந்தார். அந்த கால கட்டத்தில் பேக்கரி கணக்குகளை ஆய்வு செய்தபோது, அவர் போலி பில் மூலம் கணக்கு காட்டி ரூ.7 லட்சம் மோசடி செய்தது தெரியவந்தது. அதன்பின்னர் அவரிடம் பணம் குறித்து கேட்டபோது, பணத்தை திருப்பி கொடுத்து விடுவதாக தெரிவித்தார்.

ஆனால், அவர் பணம் தராமல் காலம் தாழ்த்தி வருகிறார். எனவே, ரூ.7 லட்சம் மோசடியில் ஈடுபட்ட காசாளர் மணிகண்டன் மீது நடவடி க்கை எடுத்து பணத்தை மீட்டு தர வேண்டும் என மனுவில் தெரிவித் திருந்தார். அதன்பேரில், ஆர்.எஸ்.புரம் போலீசார் வழக்குப ்பதிவு செய்து ஏமாற்றுதல் பிரிவில் வழக்குப ்பதிவு செய்து, ஜெகநாதனை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News