உள்ளூர் செய்திகள்

சூப்பர் மார்க்கெட்டில் ரூ.40 லட்சம் மோசடி; தொழிலதிபர் கைது

Published On 2022-11-15 09:50 GMT   |   Update On 2022-11-15 09:50 GMT
  • சூப்பர் மார்க்கெட் பணம் கையாடல் செய்து மோசடி செய்ததாக 2019-ம் ஆண்டு புகார் செய்யப்பட்டது.
  • வழக்கை விசாரித்த கோர்ட்டு நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டது.

தஞ்சாவூர்:

தஞ்சை புதியவீட்டு வசதி வாரியம்குடியிருப்பு பகுதியில் ஆயிரம் விவசா யிகளை உறுப்பினராக கொண்டு கடந்த 2015-ம் ஆண்டு டெல்டா சூப்பர் மார்க்கெட் தொடங்க ப்பட்டது.

இந்த நிறுவனம் சார்பில் 15 பேரை இயக்குநராக கொண்டு அதன் செயல் இயக்குநராக தொழில் அதிபர் ஒருவர்நியமிக்கப்பட்டார்.

இவர் 1-6-2016 முதல் 31-1-2017 வரை உள்ள காலத்தில் சூப்பர் மார்க்கெட் பணம் ரூ.39 லட்சத்து 56 ஆயிரத்து 126 கையாடல் செய்து மோசடி செய்ததாக 2019-ம் ஆண்டு புகார் செய்யப்பட்டது.

அதன்மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதனால் சென்னை உயர்நீதி மன்றம் மதுரை கிளையில் முறையீடு செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த கோர்ட் நடவடிக்கை எடுக்கும் படி உத்தரவிட்டது.

அந்த உத்தரவின் பேரில் தஞ்சை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த தொழில் அதிபரை நேற்று இரவு கைது செய்தனர்.

தொடர்ந்து அவர் தஞ்சை 2-வது நீதித்துறை நடுவர் முன்பு ஆஜர்படுத்த பட்டார்.

அவரை 15 நாட்கள் காவலில் வைக்கும்படி நீதித்துறை நடுவர் உத்தரவிட்டார்.

Tags:    

Similar News