உள்ளூர் செய்திகள்

நாமக்கல் அருகே குறைந்த விலையில் கார் தருவதாக ரூ.1.5 லட்சம் மோசடி

Published On 2023-03-23 15:04 IST   |   Update On 2023-03-23 15:04:00 IST
  • லட்சுமணன் (வயது 54), லாரி டிரைவர். இவர் பழைய கார் வாங்குவதற்காக பேஸ்புக் மூலம் தேடுதல் நடத்தி வந்தார்.
  • மர்ம நபர் ஒருவர் தன்னிடம் நல்ல கண்டிசனில் கார் உள்ளதாகவும் அதனை குறைந்த விலையில் தருவதாகவும் கூறினார்.

நாமக்கல்:

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே உள்ள குச்சிப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் லட்சுமணன் (வயது 54), லாரி டிரைவர். இவர் பழைய கார் வாங்குவதற்காக பேஸ்புக் மூலம் தேடுதல் நடத்தி வந்தார். இந்த நிலையில் அவரது செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்ட மர்ம நபர் ஒருவர் தன்னிடம் நல்ல கண்டிசனில் கார் உள்ளதாகவும் அதனை குறைந்த விலையில் தருவதாகவும் கூறினார்.

மேலும் ரூ.1.5 லட்சம் கொடுத்தால் அந்த காரை வீட்டிற்கே கொண்டு வந்து கொடுப்பதாகவும் கூறினார். இதனை நம்பிய லட்சுமணன் அந்த நபர் கொடுத்த வங்கி கண்க்கில் போன் பே மூலம் 3 தவணையாக 1 லட்சத்து 50 ஆயிரத்தை அனுப்பினார்.

பணம் அனுப்பி 2 ஆண்டுகள் ஆகியும் அந்த நபர் காரை கொடுக்கவில்லை. மேலும் அவரது செல்போனுக்கு தொடர்பு கொண்ட போது அந்த செல்போன் உபயோகத்தில் இல்லை என்று தகவல் வந்தது. இதனால் ஏமாற்றப்பட்டதை அறிந்த லட்சுமணன் நாமக்கல் மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் மர்ம நபர் பேசிய செல்போன் எண்ணை வைத்து அவரை அடையாளம் காணும் பணியில் ஈடுபட்டுள்ளனர். 

Tags:    

Similar News