உள்ளூர் செய்திகள்

துடியலூர் அருகே தலைமை ஆசிரியர் வீட்டில் தங்க நகைகள் கொள்ளை

Published On 2022-08-13 09:54 GMT   |   Update On 2022-08-13 09:54 GMT
  • புதுச்சேரியில் நடந்த உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சிக்கு சென்றார்.
  • 6 பவுன் தங்க நகைகளை கொள்ளயடித்து தப்பிச் சென்றனர்.

கோவை:

கோவை நரசிம்ம நாயக்கன் பாளையம் அருகே உள்ள ஜோதி நகரை சேர்ந்தவர் ரூபேஸ்குமார் (வயது45).

இவர் தனியார் பள்ளியில் தலைமை ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார்.

கடந்த 8-ந் தேதி ரூபேஸ்குமார் தனது வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் புதுச்சேரியில் நடந்த உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சிக்கு சென்றார்.

அப்போது இவரது வீட்டின் முன் பக்க கதவை உடைத்து மர்மநபர்கள் உள்ளே நுழைந்தனர். பின்னர் அவர்கள் அறையில் இருந்த பீரோவை திறந்து அதில் இருந்த கை செயின், மோதிரம், வளையல் உள்பட 6 பவுன் தங்க நகைகளை கொள்ளயடித்து தப்பிச் சென்றனர்.

வீட்டிற்கு திரும்பிய ரூபேஸ் குமார் கதவு திறந்து இருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த நகைகள் கொள்ளை போயிருப்பது தெரிய வந்தது.

இது குறித்து அவர் துடியலூர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

இது குறித்து துடியலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமை ஆசிரியர் வீட்டில் நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை தேடி வருகிறார்கள். 

Tags:    

Similar News