உள்ளூர் செய்திகள்

கொள்ளை நடந்த வீட்டில் பொருட்கள் சிதறி கிடப்பதையும், கைரேகை நிபுணர் தடயங்களை சேகரிப்பதையும் படத்தில் காணலாம்.

திண்டிவனத்தில் துணிகரம் வக்கீல் வீடு உள்பட 4 இடங்களில் கொள்ளை

Published On 2022-06-10 10:33 GMT   |   Update On 2022-06-10 10:33 GMT
திண்டிவனத்தில் வக்கீல் வீடு உள்பட 4 இடங்களில் கொள்ளையடிக்கப்பட்டது. விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் தாடிக்கார குட்டை தெருவை சேர்ந்தவர் ராஜசேகரன். வக்கீல். இவர் தனது குடும்பத்துடன் மேல்மலையனூர் கோவிலுக்கு சாமிக்கும்பிட சென்றார்.

திண்டிவனம்:

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் தாடிக்கார குட்டை தெருவை சேர்ந்தவர் ராஜசேகரன். வக்கீல். இவர் தனது குடும்பத்துடன் மேல்மலையனூர் கோவிலுக்கு சாமிக்கும்பிட சென்றார்.

இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி மர்ம நபர்கள் வீட்டு கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் பீரோவை உடைத்து அதில் இருந்த 8 பவுன் நகை, வெள்ளி குத்துவிளக்கு ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றனர்.

ரோசனை பிள்ளையார்கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜேஸ்வரி (வயது 75). இவர் இன்று காலை திருமண விழாவுக்கு செல்வதற்காக வீட்டை விட்டு வெளியே வந்தார். அப்போது மர்ம நபர்கள் மூதாட்டியை தாக்கினர்.

இதில் அவர் நிலை குலைந்தார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி மர்ம நபர்கள் கழுத்தில் கிடந்த 12 பவுன் நகையை பறித்து சென்றனர்.

படுகாயமடைந்த மூதாட்டி ராஜேஸ்வரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதேபோன்று ராஜாராம் என்பவரது வீட்டை உடைத்து மர்மநபர்கள் புகுந்தனர். அங்கு எதுவும் இல்லாததால் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

திண்டிவனம் கெங்கையம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் தனசேகரி. இவர் காற்று வாங்க வீட்டு முன்பகுதியில் தூங்கினார். இரவு நேரம் மர்மநபர்கள் கேட்டை உடைத்து வீட்டுக்குள் புகுந்தனர். வீட்டில் இருந்த 500 கிராம் வெள்ளி மற்றும் நகைகளை கொள்ளையடித்து சென்றனர்.

ஒரே நாளில் திண்டிவனம் பகுதியில் 4 இடங்களில் கொள்ளையர்கள் கைவரிசை காட்டியதால் பரபரப்பு ஏறபட்டது. இது தொடர்பாக போலீசார் கொள்ளையர்களை தேடி வருகிறார்கள்.

Tags:    

Similar News